திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் சீசன் இந்த ஆண்டு அமோகமாகத் தொடங்கியுள்ளது.
தொடங்கியது சீசன் (The season has begun)
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மருத்துவ குணம் அதிகம் உள்ள அத்திப்பழம் சீசன் தொடங்கியுள்ளது.
அதிக லாபம் (more profit)
விளைச்சல் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் லாபமும் தருகின்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இதனை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.
மலைப்பகுதிகளில் (In the mountains)
கொடைக்கானல் (Kodaikanal) கீழ் மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு, அணுக்கம், பெருமாள் மலை, பேத்துப்பாறை போன்ற பகுதிகளில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் அதிகளவில் விளைகிறது.
6 மாதங்களில் காப்பு (Backup in 6 months)
அத்திப்பழக் கன்று நடவு செய்து சுமார் 6 மாதங்களில் காப்பு பிடிக்கும். அதிலிருந்து 8 மாதங்கள் வரைக் காத்திருந்தால், அத்திப்பழம் அறுவடைக்கு வந்துவிடும்.
என்ன விலை?
பண்ணையில் இருந்தே நேரடியாக விற்பனை செய்யலாம். அத்திப்பழம் ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் வரை விலை கிடைக்கும்.
சொட்டுநீர் பாசனம் (drip irrigation)
5 டிகிரியில் இருந்து 45 டிகிரி வரையிலான தட்பவெப்ப நிலை நிலவும் பகுதிகளில் தாராளமாக அத்திப்பழத்தை, சொட்டுநீர் பாசனம் மூலம் எளிமையாக சாகுபடி செய்யலாம்.
மருத்துவப் பயன்கள் (Medicinal uses)
உடல் எடை அதிகரிக்க (To increase body weight)
தினசரி 2 பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
எலும்புகளுக்கு (To the bones)
அத்திபழத்தில் இரும்புச்சத்து உள்ளது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.
சுறுசுறுப்பு (Agility)
உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
நோய் தீர (Disease Coast)
வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூச வேண்டும்.
போஷாக்கு (Nutrition)
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்தும் சாப்பிடலாம்.
ஆஸ்துமா (Asthma)
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் உதவுகிறது.
நோயைக் கட்டுப்படுத்தும் (Controlling the disease)
அத்திப்பழங்கள் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உஷ்ணத்தை குறைத்து மூல நோயைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
மேலும் படிக்க...
நவீன இயந்திரங்கள் வரமா? சாபமா? அழிவின் விளிம்பில் உழவு மாடுகள்!
வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வனியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!
Share your comments