அதிகவரத்து காரணமாக இந்த முறைத் தக்காளிக்கு விலை கிடைக்கவில்லை. அடிமாட்டுவிலைக்கு விற்கப்படுவதால், திருப்பூர் விவசாயிகள் விரக்தியில் வயருக்கு தக்காளியை உரமாக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் திருப்பூர், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் இம்முறை அதிகமாக உள்ளது. திருப்பூரில் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆண்டு முழுவதும் சாகுபடி (Cultivated throughout the year)
மற்ற பகுதிகளைப்போல இல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி நடைபெறுவதால் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வந்து தக்காளி வாங்கி செல்வது வழக்கம்.
திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி கிலோ ரூ.5 ஆக சரிந்ததால், செடியில் தக்காளி பறிப்பதையே விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இந்த மாத துவக்கத்தில் தக்காளி விலை குறைந்தது. கிலோ, ரூ.15ல் இருந்து ரூ.5க்கும், சில்லறை விலையில் ரூ.6க்கும் தக்காளி கிடைக்கிறது.
திண்டுக்கல்
இதேபோல் திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் பரவலாகத் தக்காளி பயிரிடப்படுகிறது. குறிப்பாக அய்யலூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், வடமதுரை பகுதிகளில் அதிக அளவில் சாகுபடியாகிறது.
விலை வீழ்ச்சி (Deflation)
இது தவிர ஓசூர் பகுதிகளிலிருந்தும் திண்டுக்கல்லிற்கு வரத்து உள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் வரத்து அதிகரித்து விலை வெகுவாக குறைந்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் ரூ.30 விற்ற தக்காளி தற்போது ரூ.5 ஆக சரிந்துள்ளது.
பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டாததால் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் கிடைத்த விலைக்குக் கொடுத்துச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பறிப்பதைத் தவிர்க்கும் விவசாயிகள் (Farmers who avoid plucking)
தக்காளி விலை சரிவால் அதனைப் பறித்துச், சந்தைக்கு கொண்டுசெல்வதை விவசாயிகள் தவிர்த்துவிட்டனர்.
விவசாயிகள் கருத்து (Farmers comment)
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது ஒரு கிலோ தக்காளிக்கு வெறும் 5ரூபாய் கிடைப்பதால், செடிகளில் இருந்து தக்காளி பறிப்பதையே தவிர்த்து விட்டோம். இதனால் அழுகும் தக்காளிகளும், பழுத்த தக்காளிகளும் தோட்டத்தில் உரமாக்கப்பட்டு விடுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விலை உயரும் அபாயம் (Risk of rising prices)
அதேவேளையில் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்காததால், அடுத்த பருவத்திற்குத் தக்காளி விளைச்சலில் அதிக விவசாயிகள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இதனால், விரைவில் தக்காளி விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments