மதுரை மாவட்டம், கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
பதிக்கும் பணி (Imprinting work)
எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேன் நிறுவனம் (Indian Oil Corporation)சார்பில், சென்னை எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு வட்டங்கள் வழியாக இந்த குழாய்களைப் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே, மேலூர் வட்டத்தில் கிராமங்களில் இப்பணி நடைபெற்று முடிந்துள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பு (Public protest)
இந்நிலையில், கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள சில கிராமங்களில் எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மதுரை கிழக்கு வட்டம் மாங்குளம், சிட்டம்பட்டி, இலங்கிப்பட்டி, ராஜாக்கூர் வரிச்சியூர், குன்னத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
மதுரை கிழக்கு வட்டத்தில் மாங்குளம் முதல் குன்னத்தூர் வழியாக எரிவாயு குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
பாதிப்புகள் (Vulnerabilities)
-
இதனால், பெரியாறு பாசனத்தில் பயன்பெறும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
-
இந்தப் பகுதியில் 10 கண்மாய்களை அழித்துக் குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
-
குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சுமார் 50 அடித்தொலைவில் இப்பணி நடைபெறுவது, பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
-
எனவே மாற்றுப் பாதையில் நெடுஞ்சாலைகள் ஓரமாக எரிவாயுக் குழாய் பதிக்கும் பணியைத் தொடர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
இதை செய்தால் போதும்- மாமரப் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும்!
பகலில் சுட்டெரிக்கும் வெயில்- தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
Share your comments