பழையப் பொருட்களை தூக்கி வீசாமல் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதால் வீணாவதை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மட்டுமின்றி பட்ஜெட் செலவையும் மிச்சப்படுத்தலாம். இதற்கு கொஞ்சம் மூளையை கசக்கி, நேரத்தை ஒதுக்கினாலே போதுமானது. பைசா செலவில்லாமல் வீடுகள் அலங்காரமாக ஜொலிக்கும். எனவே பழைய, வீணாகக்கூடிய ஜீன்ஸ் பேன்ட்களை பயன்படுத்தி தோட்டத்தை அலங்கரிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
ஜீன்ஸ் (Jeans)
ஜீன்ஸை முழங்கால் வரை வெட்டியெடுத்து அதில் மண்ணை நிரப்ப வேண்டும். இதில் உங்களுக்கு பிடித்தமான பூக்கள், கீரைகள், தக்காளி போன்ற சிறியளவிலான செடிகளை வளர்க்கலாம். அல்லது அப்படியே சிறிய பிளாஸ்டிக் பூத்தொட்டிகளை ஜீன்ஸுக்குள் வைக்கலாம். ஆங்காங்கே தோட்டத்தில் சுவரை ஒட்டியவாறோ அல்லது சாயாமல் இருக்குமாறோ வைத்தால் தோட்டத்தின் அழகை மெருகேற்றலாம்.
அலங்காரப் பொருட்கள் (Decoration Things)
ஜீன்ஸின் கால் பகுதிகளை சீராக ஒரே அளவில் வெட்டியெடுத்து மண்ணால் நிரப்பவும். இதில் சிறிய பூச்செடிகளை வளர்த்து ஆங்காங்கே அலங்காரப் பொருட்களாக காட்சிப்படுத்தலாம். ஹால் மற்றும் சமையலறைகளில் ஜன்னல்களுக்கு அருகே அழகு சேர்க்கும் சிறிய செடியுடன் கூடிய தொட்டிகளை இதில் வைத்து ஆங்காங்கே அலங்கரிக்கலாம். பால்கனி, வராண்டா போன்ற இடங்களில் அலங்காரத்துக்காக வளர்க்கப்படும் செடிகளின் ஸ்டாண்டுகளில் இந்த ஜீன்ஸை மாட்டிவிட்டால் ஸ்டைலாகவும், ரிச் லுக்கும் தருகிறது. உங்களின் ரசனை மற்றும் திறமைக்கேற்ப ஜீன்ஸின் பெல்ட், ஷூ மாட்டி விதவிதமான தோற்றத்தில் அலங்கரிக்கலாம்.
ஜீன்ஸில் பாக்கெட்டுடன் கூடிய பைகளாக தைத்து, தோட்ட வேலைக்குத் தேவையான டூல்ஸ்களை அதில் இருப்பு வைக்கலாம். பால்கனியை ஒட்டி நான்கைந்து ஜீன்ஸ்களை வரிசைப்படுத்தி மண்ணால் நிரப்பி பூத்தொட்டிகளை வளர்க்கலாம். அப்போது விழாமல் இருக்க கயிறு அல்லது கம்பியால் வெளிப்பகுதியில் தெரியாதவாறு கட்டிக்கொள்ள வேண்டும். ஜீன்ஸின் உள்பக்கத்தில் பாலிதீன் கவரை வைத்து மண்ணை நிரப்பினால் பல நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
சிமென்ட் ஜீன்ஸ் பூத்தொட்டி (Cement Jeans Flower pot)
ஒரு முழு ஜீன்ஸில் பிளாஸ்டிக் வாட்டர் கேன் இரண்டை முழங்கால் பகுதியில் வைத்து நூலால் கட்டி விடவும். பின்னர் முழங்காலை மடித்தாற்போன்று வைத்துகொண்டு அதில் சிமென்ட், மணல் மற்றும் பொடித்த தெர்மோக்கோல் அட்டை ஆகிய கலவையால் நிரப்பவும். இடுப்புப் பகுதியில் மட்டும் செடிகளை வளர்ப்பதற்கேற்ப காலியாக விட வேண்டும். இரண்டு நாட்களில் இந்த சிமென்ட் கலவை கெட்டியாக செட் ஆகி இருக்கும்.
இப்போது உட்கார்ந்த நிலையில் இருக்கும் சிமென்ட் ஜீன்ஸ் பூத்தொட்டி ரெடி. இதில் சிறிய கலர்புல்லான பூச்செடிகளை வளர்க்கலாம். இதை உங்கள் வீடு வராண்டா அல்லது தோட்டத்தில் வைக்கலாம்.
மேலும் படிக்க
குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
தஞ்சையில் அலையாத்தி காடுகள் வளர்ப்புத் திட்டம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Share your comments