திண்டுக்கல் மாவட்டத்தில் மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,700 எக்டர் பரப்பளவில் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது, பனி மற்றும் குளிர் காலம் என்பதால் பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
இந்த நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? (What are the effects of this disease?)
சாம்பல் நோயால் பாதிக்கப்பட்ட பயிரானது இலைப்பரப்பு
- உதிர்தல்,
- இலையின் அடிப்புறம் வெள்ளை நிறப்பொடி போன்ற வளர்ச்சி காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் காயந்துபோகும்.
- வேகமாக சுருங்கிவிடும் மற்றும்
- பூக்காம்புகள் குட்டை வளர்ச்சியுடன் உருமாறியும் காணப்படும்.
இந்த நோயின் இருப்பிடம் எது?
மண்ணில் உள்ள பயிர் குப்பைகளின் மீது, இந்த பூஞ்சான் உயிர் வாழும் மற்றும் விதையின் மூலமும் பரவும் என்பது குறிப்பிடதக்கது.
நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? (What can be done to control the disease?)
- இந்த நோயை கட்டுப்படுத்த, வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இரகங்களை பயிரிட வேண்டும்.
- சரியான இடைவெளியில் பயிர் செய்ய வேண்டும். நோயின் ஆரம்ப அறிகுறியின்போது, நனையும் கந்தகம் 0.25 சதவீதம் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
- போஸ்டைஸ் அலுமினியம் 2.5 கிராம்/லிட்டர் அல்லது டினோகார்ப் 2.50 மில்லி/ லிட்டர் (அல்லது) பிப்ரோநில் 2 மில்லி / ஜிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தல் போன்ற, இந்நோயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும் என திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்கநர் திரு.ஜோ.பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.
TNAU-இன் மிளகாய் வற்றலுக்கான விலை முன்னிறிவிப்பு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, மிளகாய் வற்றலுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. உலகளவில், மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதன்மையாக திகழ்கிறது. இந்திய மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மை ஆகிய வணிக பன்புகளுக்காக உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தில் 2021-22ம் ஆண்டில் 0.54 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 0.24 லட்சம் டன் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான சன்னம் ரக மிளகாய் வற்றலின் சராசரி பண்ணை விலை குவிண்டாலிற்கு ரூ.180 முதல் ரூ.200 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் அணுகவும்.
மேலும் படிக்க:
மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம்: 10 செடிகள் முதல் குரோ பேக் வரை பெறலாம்!
இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வேண்டுமா? இதோ விவரம்!
Share your comments