பூசணியில் சில வகைகள் உள்ளன. அவற்றின் உட்பகுதியில் உள்ள நிறத்தைக் கொண்டு, வெள்ளைப்பூசணி, மஞ்சள் பூசணி என அழைப்பது வழக்கம்.
இந்த பூசணிவகைகளைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது பழ ஈக்கள். அவற்றில் இருந்து பூசணியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.
அறிகுறிகள் (Symptoms)
-
கால்களற்ற புழுக்கள் காய்களின் உட்பகுதியில் உள்ள திசுக்களைச் சாப்பிடும்.
-
காய்கள் உருக்குலைந்து காணப்படும்.
-
காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக உதிர்ந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை (Control method)
-
உட்பரவல் உள்ள இடங்களில், விதைக்கும் காலத்தை மாற்றி அமைத்து, தாய் ஈக்களின் நடமாட்டம் வறண்ட வெப்பமான காலங்களில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும் படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
கூட்டுப்புழுக்களை உழவு செய்து மண்ணிலிருந்து வெளிக் கொணர்ந்து சேகரித்து அழிக்கலாம்.
-
பீர்க்கன் காயைக் கவர்ச்சிப்பயிராக பயிரிட்டால், அதன் இலையின் ஈக்கள் சேரும். அவ்வாறு சேரும் ஈக்களை கார்பரில் 0.15 சதம் அல்லது மாலத்தியான் 0.1 சதம் தெளித்து அழிக்கலாம்
-
சிட்ரானல்லா எண்ணெய், நீலகிரிமர எண்ணெய், வினிகர் (அசிட்டிக் அமிலம்) மற்றும் லாக்டிக் அமிலம் இவற்றைக் கவர்ச்சிப்பொருளாக வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
நச்சு உணவுப் பொறி (Toxic food trap)
-
மெத்தைல் யூஜினால் + மாலத்தியான் இரண்டையும் சம அளவு கலந்து (1:1) ஒவ்வொரு பாலித்தீன் பைகளில் 10 மி.லி அளவுக்கு எடுத்து நச்சுப்பொறியாக ஹெக்டேருக்கு 25 என்றக் கணக்கில் வைக்க வேண்டும்.
-
பாலித்தீன் பைகளில் 5 கிராம் கருவாடு + 0.1 மி.லி டைகுளோர்வாஸ் வைத்து பைகளில் துளையிட்டு பொறியாகப் பயன்படுத்தி ஹெக்டேருக்கு 5 என்ற அளவில் வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
-
ஒவ்வொரு வாரமும் டைகுளோர்வாஸ் சேர்க்க வேண்டும் நாட்களுக்கு ஒரு முறை கருவாட்டை மாற்ற வேண்டும்.
-
இந்த யுக்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், பூசணிவகைகளில் பழ ஈக்களின் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
தகவல்
சசிரேகா
வேளாண்மை உதவி இயக்குநர்
ஊத்துக்குளி
மேலும் படிக்க...
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments