1. தோட்டக்கலை

மண் வளம் பேணும் மண்புழுக்கள்: எபிஜெனிக்ஸ், அனிசிக்ஸ், எண்டோஜியிக்ஸ்

KJ Staff
KJ Staff
red worm

உலக வரலாற்றில் மண்புழுக்கள் போன்று, மனித இனத்திற்கு உதவிகரமாகச் செயலாற்றும் உயிரினம் வேறெதுவும் கிடையாது என்று உறுதிபட கூறியுள்ளது உலக அறிவியியலாளர் சார்ல்ஸ் டார்வின். மண்ணில் ஏற்படும் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் மண்புழுக்களுக்கும், கரையான்களுக்கும் பெரும்பங்கு உள்ளன. மண்வளத்தை பேணி பராமரிப்பதிலும், மண்ணில் பயிரூட்டங்களின் மாரு சுழற்சியை மேம்படுத்துவதிலும் மண்புழுக்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இதனால் தான் "மண்புழுக்கள் உழவனின் உற்ற  நண்பன்' என்று கூறுகின்றது.

பொதுவாக மண்புழுக்கள் மக்கு உண்ணிகள் (Saprophages) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. உண்ணும் பழக்கத்தின் அடிப்படையில்  மண்புழுக்கள் கழிவு உண்ணிகள் (detritioores) மற்றும் மண் உண்ணிகள் (geophages) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. கழிவு உண்ணிகள் மண்ணின் மேற்பரப்பிலோ, அதன் அடியிலோ உணவு உண்ணக்கூடியவை. மேல் மண்ணில் காணப்படும் தாவரக்கழிவுகள், மடிந்த வேர்கள் மற்றும் கால்நடை கழிவுகள் இவவகை மண்புழுக்களின் முக்கிய உணவாகும். அதனால் இந்த வகை மண்புழுக்கள் "மக்கு உரம் உருவாகிகள்" (humus formers) என்று அழைக்கப்படுகின்றன. மண் உண்ணிகள் (geophages) எனப்படுபவை அடி மண்ணை அதிக அளவு உண்ணுகின்றன.

மண்புழுக்கள் சூழலிய பண்புகளின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

1. மேற்பரப்பில் வாழ்பவை (எபிஜெனிக்ஸ் - epigeics)

2. நடுப்பகுதியில் வாழ்பவை (அனிசிக்ஸ் - Anecics)

3. கீழ்ப்பகுதியில் வாழ்பவை (எண்டோஜியிக்ஸ் - Endogeics)

red worm for soil fertility

மண்ணின் மேற்பரப்பில் வாழும் மண்புழுக்கள் (எபிஜெனிக்ஸ்)

இவ்வகை மண்புழுக்கள் மண்ணின் ஒரு அடி ஆழத்திற்குள் வாழ்பவை. இவை வேகமாக ஊர்ந்து செல்லும் ஆற்றல் படைத்தவை. அணைத்து உயிரினக் கழிவுகளையும் உன்னைக் கூடியவை. ஒரு நாளில் 4-5 கிலோ கரிமக்களிவுகளி உன்னைக் கூடியவை. மண்ணை வளப்படுத்துவதற்கு மண்ணில் நல்ல காற்றோட்டம்  ஏற்படச் செய்வதற்கும் இவை சாலச்சிறந்தது. மண்புழு உரம், தயாரிப்பதற்கு இவ்வகை புழுக்கள் மிகவும் உகந்தவை. யூட்ரிலஸ் யூஜினியே (Edurileus euginiae), ஐசினியா ஃபோட்டிடா (Eiseniae foetida) போன்ற வெளிநாட்டு மண்புழுக்களும், பெரியோனிக்ஸ் எக்ஸவேட்டஸ் (perionyx excavatus) பெரியோனிக்ஸ் மில்லார்டி (perionyx millarde) போன்ற உள்நாட்டு மண்புழுக்களும் இந்த மேற்பரப்பு வகை மண்புழுக்கள் ஆகும்.

மண்ணில் நடுப்பகுதியில் வாழும் மண்புழுக்கள் (அனிசிக்ஸ்)

இந்த வகை மண்புழுக்கள் நிலத்தில் ஒரு அடி முதல் இரண்டு அடி ஆழத்தில் வாழ்கின்றவை. மண்ணிலுள்ள எல்லா வகை கரிம பொருட்களையும் உண்ணக்கூடியவை. இந்த வகை மண்புழுக்கள் மண்ணில் மேலும் கீழும் நகர்ந்து செல்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. நீர்ப்பிடிப்பு அதிகரிக்கிறது. இவை குறைந்த அளவே உண்ணும் திறன் கொண்டவை. லாம்பிடோ மாரிட்டி (Lampito mauriti) போன்ற உள்நாட்டு மண்புழுக்கள் இந்த வகையாகும்.

soil fertilizer

மண்ணின் கீழ்ப்பகுதியில் வாழும் மண்புழுக்கள் (எண்டோஜியிக்ஸ்)

இந்த வகை மண்புழுக்கள் நிலத்தில் ஆறு அடி ஆழத்தில் வாழ்கின்றவை. இதன் கழிவுகளை மண்ணின் மேற்பரப்புக்கு தள்ளுகின்றன.  இவை மண்ணின் மேலும் கீழும் நகர்வதால் நிலத்தில் சுரங்கப்பாதைகள் ஏற்படுகின்றன. அதன் பயனாக அடிமண்ணில் அதிக காற்றோட்டம், தண்ணீர் வடியும் வசதியும் ஏற்படுகின்றன. பயிரின் வேர்களுக்கு சூரிய வெப்பம் கிடைக்கிறது. அதனால் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஆக்டோகிட்டோனா தர்ஸ்டோனி (Octochaetona thurstoni) மற்றும் மெட்டாபைர் போஸ்துமா (Metaphire postuma) ஆகியன இந்த வகை மண்புழுக்களாகும்.

மண்புழுக்கள் ஒரு வருடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 1200 டன் மண்ணை உட்கொண்டு, நாங்கூழ் மண்ணாக வெளியேற்றுகின்றன.  இதன் மூலம் வளப்படுத்துகின்றன. மண்புழுக்கள் தங்களது செயல்பாடுகளால், மண்ணின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளின் விரும்பத்தக்க விளைவுகளை  ஏற்படுத்தி மண்ணை வளப்படுத்துகின்றன.

https://tamil.krishijagran.com/horticulture/here-are-some-organic-methods-to-improve-soil-fertility/

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: How to improve soil fertility? here are some important soil fertilizers

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.