1. தோட்டக்கலை

பஞ்சகவ்யம் தயாரிப்பு முறைகள் மற்றும் அதன் பயன்கள்

KJ Staff
KJ Staff
panchakavyam

பண்டைக் காலத்தில் நமது முன்னோர்கள் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். அத்தகைய பாரம்பரிய மிக்க நாட்டில் இருக்கும் நாம், நமக்காகவும், நமது சந்ததியினர் நலம் காக்கவும், இயற்கை வேளாண்மையின் பக்கம் மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நவீன விஞ்ஞான உத்திகளை கையாண்டு இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்க பல்வேறு தொழில் நுட்பங்கள் விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டுள்ளன. அத்தகைய தொழில் நுட்பங்களில் ஒன்றுதான் பஞ்சகவ்யா.

தேவையான பொருட்கள்

 

பொருட்கள்

அளவு

1

பச்சை பசுஞ்சாணம்

- 5 கிலோ

2

பசுமாட்டு சிறுநீர்

- 3 லிட்டர்

3

பசுமாட்டு பால்

-2 லிட்டர்

4

பசுமாட்டு தயிர் (நன்கு புளித்தது)

-1 லிட்டர்

5

பசுமாட்டு நெய்

-1 லிட்டர்

6

கரும்புச் சாறு (அ) நாட்டுச் சர்க்கரை

-3 லிட்டர்
-1 கிலோ

7

இளநீர்

-3 லிட்டர்

8

வாழைப்பழம்

-12

9

கள்

-1 லிட்டர்

செய்முறை

panchakavyam preparation

பச்சை பசுஞ்சாணி 5 கிலோவுடன் பசு மாட்டு நெய் 1 லிட்டரை கலந்து, பிசைந்து ஒரு வாயகன்ற மண்பானையில் 4 அல்லது 5 நாட்கள் வைக்கவும். இதை தினமும் இருமுறை (காலி மற்றும் மாலை வேளையில் நன்கு கலக்கவும்). மேலும் இக்கலவையை தினமும் காலை சூரிய ஒளியில் 30 நிமிடங்கள் வைக்கவும்.

ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை நன்கு கரைத்துக் கலக்கி, கம்பி வலையில் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் ஒரு  முறையோ அல்லது பல முறையோ நன்கு கலக்கிவிடவும். அதிகம் கலக்கினால் கலவைக்கு அதிக காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அபரிமிதமாகப் பெருகி மிகுந்த பலன் கொடுக்கும். இப்படியாக 15 நாட்கள் செய்து வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை ஆறுமாதம் வரை தினமும் கலக்கிவிட்டு கெடாமல் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைந்து கெட்டியானால் மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து  கலக்கி வரவேண்டும். நாட்கள் அதிகமாக கலவைக்கு அதிக பலன் உண்டு.

பஞ்சகவ்யாவில் அனைத்து பேரூட்டச் சத்துக்களும், நுண்ணுயிர் சத்துக்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும், மிகுந்த அளவில் உள்ளன. 75% உரமாகவும் 25% பூச்சி மற்றும் நோய்க்கொல்லி  மருந்தாகவும், வேலை செய்கிறது.

பயன்படுத்தும் முறை

panchavyam 2

300 மி.லி. கரைசலை  10 லிட்டர் நீர்  என்ற அளவில் கலந்துகொண்டு இலை வழி தெளி உரமாகக் காலை அல்லது மாலை நேரங்களில் அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். கைத் தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டிக் பயன்படுத்தவும் விசைத் தெளிப்பானில்  அடைப்பானையும், குழாயின் நுனிப் பகுதியையும் பெரிதாகச் செய்துகொண்டால் தெளிப்பு அடைப்பின்றி ஒரே சீராக வரும்.

பஞ்சகவ்யா தெளிக்கும் கால முறைகள் 

* பழமரங்களுக்கு நடவு செய்யப்பட்ட பின் வாரம் ஒரு முறையும், பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறையும், நன்கு வளர்த்து பிறகு மாதம் ஒரு முறையம் தெளிக்க வேண்டும்.

* காய்கறி மற்றும் இதர பயிர்களுக்குப் பூ எடுப்பதற்கு ஒரு மாதம் முன்பு வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை.

* பூ எதுத்து பின்பு வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை.

* பிஞ்சு வைத்த பின்பு வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை.

* அறுவடைக்கு பின் மரங்களின் வளம் காக்க ஒரு முறை தெளிக்கவும் .

இவ்வாறு தெளிப்பதால்

* கூடுதல் மகசூல்

* மண்ணின் வளம், பயிர்களின் வளம் காக்கப்படுகிறது.

* பயிரின் வேர் நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது.

* பயிரின் தன்துப் பகுதி நீளமாகவும், பருமனாகவும், உறுதியாகவும் வளரும்.

* பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படுகிறது.

* பூக்கள் வாடாமல் ஒரு நாள் முழுவதும் இருக்கும்.

* பழ மரங்களின் தெளிப்பதால் பழங்களின் தரம் கூடுகிறது.

* விளைச்சலும் 10-15 நாட்கள் முன்பே அறுவடைக்கு வருகின்றன.

* தரமான நஞ்சற்ற பொருள் கிடைக்கிறது.

* சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது.

* மேற்கண்டவாறு தெளிக்க இயலாதவர்கள் மேற்கண்ட ஒவ்வொரு காலகட்டத்திலும்  ஒரு முறை மட்டுமாவது தெளிக்கலாம். அதிக தெளிப்பு அபரிமிதமான பலனைக் கொடுக்கிறது.

https://tamil.krishijagran.com/horticulture/how-to-improve-soil-fertility-here-are-some-important-soil-fertilizers/

K.Sakthipriya
Krishi Jagran

   

English Summary: How to prepare panchakavyam and what are the uses of panchakavyam Published on: 24 July 2019, 06:11 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.