சின்னவெங்காயத்தின் விதை தேவைக்காகப் பயிர்களை பராமரிக்கும் போது, கலவன்களை நீக்குதல் உட்பட பணிகளில், கவனம் செலுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
சின்ன வெங்காயம் (small onion)
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப் பாசனத்துக்கு, மூன்று சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
விலை அதிகரிப்பு (Price increase)
நடவின் போது, விதையின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு உள்ளிட்டக் காரணங்களால், விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர்.எனவே, தாங்களாகவே விதை உற்பத்தி செய்யும் நடைமுறையை துவக்கியுள்ளனர்.
பராமரிப்பு (Maintenance)
சாகுபடியில், குறிப்பிட்ட பாத்திகள் மட்டும், பயிர்களை அறுவடை செய்யாமல், பூக்கள் வரும் வரை, பராமரிக்கின்றனர். பின்னர், பூங்கொத்திலிருந்து விதைகளைச் சேகரித்து, அடுத்த நடவு சீசனுக்கு பயன்படுத்து கின்றனர்.
வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Agricultural University)
சின்னவெங்காய விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, உழவன் செயலி வாயிலாக, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆலோசனைகள் (Suggestions)
-
அதன்படி, விதை தேவைக்காக, பராமரிக்கப்படும் பாத்திகளில், குறிப்பிட்ட ரகத்தின் குணாதிசியத்தில் இருந்து மாறுபட்டு தெரியும், எல்லா பயிர்களையும், களைகளையும், முழுவதுமாக அகற்ற வேண்டும்.
-
செடிகளின் உயரம், இலை, பூங்கொத்தின் நிறம், அமைப்பு மற்றும் பூக்களின் தன்மையை கொண்டு கலவன்களை நீக்கலாம்.
-
இவ்வாறு, செய்வதின் மூலம், உண்மையான விதை நல்ல தரமானதாக கிடைப்பதுடன், ரகத்தின் பாரம்பரிய தன்மைகளை பாதுகாக்கலாம்.
-
விதையை அறுவடை செய்யும் தருணத்தில், பூங்கொத்தில், 50 சதவீத கருப்பு விதைகள் வெளியே தெரியும்.
-
இந்த சமயத்தில், பூங்கொத்துகளை மட்டும், அறுவடை செய்து, சாக்குப் பைகளின் மீது பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும்.
இதுபோன்று இன்னும் பல்வேறு ஆலோசனைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
மேட்டூர் கால்வாயில் 13 ஆண்டுகளுக்கு பின் பாசனத்திற்கு நீர் திறப்பு
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!
Share your comments