வடகிழக்கு பருவமழையின்போது (North East Monsoon) காய்கறி விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத்துறை யோசனை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், இதுகுறித்து உதகை தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை காலத்தில் காய்கறி பயிர்கள், பல்லாண்டு பயிர்கள் மற்றும் பசுமை குடில் நிழல்வலை கூடாரம் அமைத்து உள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
-
பசுமைக்குடிலின் அடிப்பாகம் பலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
-
பட்டுப்போன காய்ந்து போன மரங்கள் மற்றும் கிளைகள் பசுமைக்குடிலை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
-
பசுமை குடிலின் கட்டுமானத்தில் உள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமை குடிலை சுற்றி உயிர் வேலி அமைக்க வேண்டும்.
-
பல்லாண்டு பயிர்களான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், கொக்கோ போன்றவற்றுக்கு பூஞ்சாண நோய்களை தடுக்க சூடோமோனஸ் தெளித்துப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
-
காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றுவ துடன், வாழை, காய்கறிகள், பந்தல் காய்கறிகள், பூக்கள் போன்ற வற்றுக்கு நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும்.
-
டிரைக்கோ டெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும்.
-
சூடோமோனஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியை இலையில் தெளிக்க வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!
இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!
PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!
Share your comments