கோடை காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தமிழகம் முழுவதும், இறவை பாசனத்தில், கம்பு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
கோடையில் குளிர்ச்சி (Cooling in the summer)
சிறுதானிங்களில் ஒன்றான கம்பு நம் உடலுக்கு தெம்பு கொடுப்பது என்றே சொல்லலாம். குறிப்பாகக் கோடை காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய உடல் சூடு பிரச்னைக்கு சிறந்தத் தீர்வாக அமைகிறது கம்பு.
கம்மங்கூழ்
அதனால்தான் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், நம்மில் பலரது வீடுகளிலும் கம்மங்கூழ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் கம்மங்கூழ் விற்பனை களைகட்டும்.
கம்பு சாகுபடி (Rye cultivation)
இதனைக் கருத்தில்கொண்டு,கோவை மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், இறவை
பாசனத்துக்கு, தானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கோடை காலத்தில், கம்மங்கூழ் அதிகமாகப் பயன் படுத்துகின்றனர்.
அமோக விற்பனை (Sales Increases)
அனைத்து சாலைகளிலும், இத்தகைய கூழ் விற்பனை ஏப்ரல் மே மாதங்களில், ஜோராக நடக்கிறது. எனவே இந்த சீசனில் கம்பு தாணியத்துக்குத் தேவை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் திட்டமிட்டு இறவை பாசனத்தில் இச்சாகுபடியை மேற் கொள்கின்றனர்.
வீரிய விதைகள் (Active seeds)
அதிக விளைச்சலைக் கருத்தில்கொண்டு வீரிய ரக விதைகள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
விவசாயிகள் கருத்து (Farmers comment)
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கோடை காலத்தில் கம்பு தானியத்துக்கு நல்ல விலை கிடைக்கும். அறுவடைக்குக் கதிர்கள் தயாரானதும், காலை மற்றும் மாலை நேரங்களில் விளைநிலங்களில் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
ஈரோட்டில் ஏல முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் பூக்கள் விற்பனை
மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை! நிவாரணம் வழங்க கோரிக்கை!
கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!
Share your comments