இனிப்புக்குப் பெயர் பெற்ற கரும்பைச் சுவைக்க அனைவருக்குமே விருப்பம்தான். ஆனால் அதனைப் பார்த்துப்பார்த்துப் பயிரிடுவது முதல், காற்று, மழை, வெயில் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மட்டுமல்ல, பூச்சி, நோய்த் தாக்குதலில் இருந்தும் கட்டிக்காத்து, சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவருவதில் எத்தனை சிரமங்கள்.
இதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல். எனவே ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலம் கரும்பை சுவைமிகுந்த கரும்பாக மாற்ற முடியும்.
இதற்குப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.
நடவு காலம் (Planting period)
ஜூலை- ஆகஸ்ட் மாதங்களைக் கடந்து, நடவு செய்தால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ரகங்கள் (Varieties)
நுனி குருத்து புழுவின் தாக்குதலைத் தாங்கி எதிர்த்து வளரும் ரகங்களைப் பயிரிட வேண்டும். அதாவது கோ 745, கோ மற்றும் கோ 722 ஆகிய ரகங்களை பயன்படுத்தும் பொழுது அதிகமான பூச்சித் தாக்குதலின்றி நன்கு வளரும்.
கரணைகளை மாலத்தியான் 0.05 சதக் கலவையில் முக்கிய பின் நட வேண்டும்
முட்டை குவியல்களையும், பூச்சிகளினால் தாக்கப்பட்ட குருத்துக்களையும் சேகரித்து அழிக்க வேண்டும்.
சேதத்தைக் குறைக்க (To minimize damage)
-
அதிக தழைச்சத்தும், ஈரத்தன்மையும் பூச்சிகளின் சேதத்தை அதிகரிக்கின்றன. ஆதலால் சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும்.
-
செதில்பூச்சி நுனிக் குருத்துப்புழு, பைரில்லா பூச்சி ஆகியவற்றின் இரை விழுங்கி, ஒட்டுண்ணிகளாகிய பொறி வண்டு, ஐசோடியா ஆகியவற்றைப் பெருக்கி விடுதல் வேண்டும்.
-
கரும்பு நடவு செய்யும் வயலை நன்கு ஆழமாக உழ வேண்டும். இதனால் நிலத்தின் அடியில் உள்ள வேர் புழுக்கள் மற்றும் கரையான்கள் அழிக்கப்படுகின்றன.
-
நிலத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் வெள்ளை ஈயின் சேதம் குறையும்.
-
விளக்குப் பொறிகள் வைத்து வேர் புழுக்களின் வண்டுகள் பைரில்லா பூச்சி ஆகியவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு,
சி.சக்திவேல், மின்னஞ்சல் durai sakthivel 999@ gmail. com, ஆ.விந்தியா மின்னஞ்சல் : Vindhiya
lucky@gmail.com, இளங்கலை வேளாண் மாணவ-மாணவியர், பிரிஸ்ட் பல்கலைக்கழகம் தஞ்சை மற்றும் ச.பால முருகன், முனைவர்(பூச்சியியல்துறை)மின்னஞ்சல் : sbala512945@gmail.com. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments