மல்லிகை பூக்கள் நல்ல நறுமணமுடைய தன்மை கொண்டவை. பெண்கள் பூக்களைக் கட்டித் தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய மல்லிகையினைப் பயிரிட வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் இருக்கும். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களின் பயிரிடும் முறைகளை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மல்லிகையானது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் முதலான நாடுகளில் காணப்படுகிறது. மல்லிகை வளர்வதற்கு போதிய அளவு வசதியும், சூரிய வெளிச்சமும் தேவையானதாக இருக்கின்றது. வாசனை எண்ணெய் தயாரிக்க மல்லிகையின் மொக்குகள் பயன்படுகின்றன. தமிழகத்தில் மல்லிகைச்செடியினை வீடுகளிலும், தோட்டங்களிலும் பந்தலிட்டு வளர்த்து அதன் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதன் பயிரிடும் முறைகளைப் பார்க்கலாம்.
மல்லிகை- பயிரிடும் முறைகள்
- குண்டுமல்லி, சிங்கிள் மோக்ரா, டபுள் மோக்ரா முதலிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. ஜுன் – நவம்பர் மாதம் தான் மல்லிகைச் செடிகளை நடுவதற்கு ஏற்ற பருவம் ஆகும்.
- நல்ல வடிகால் வசதியுடைய வளமான இருமண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
- மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருத்தல் வேண்டும்.
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவேண்டும்.
- பிறகு 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை 1.25 மீட்டர் இடைவெளியில் இருக்குமாறு தயார்செய்து கொள்ள வேண்டும்.
- அதன் பின்பு ஒவ்வொரு குழியிலும் தொழு உரம் இட்டு ஆற போடுதல் வேண்டும்.
- ஒரு எக்டருக்கு நடவு செய்ய 6400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் தேவைப்படலாம்.
- தயார் செய்துள்ள குழிகளின் மத்தியில் பதியன்களை நட்டு நீர்ப்பாய்ச்சினால் போதுமானது ஆகும்.
உரப் பயன்பாடு
- மல்லிகைச் செடிகளுக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
- பின் கவாத்து செய்தவுடன் ஒரு முறையும் பின்பு ஜுன் – ஜுலை மாதத்தில் மறுமுறையும் செடிகளைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்தல் வேண்டும்.
நீர் விடுதல்
- நீர் விடுதல் என்று பார்க்கும் போது செடிகள் நட்டு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சிட வேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து நன்கு வளரும் வரையில் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
- பிறகு மண்ணின் தன்மை மற்றும் காலநிலைக்கேற்ப நீர்ப் பாய்ச்சுதல் அவசியம் ஆகும்.
எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் மல்லிகையினை நட்டுப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50% மானியம் வேண்டுமா? இன்றே பதிவு செய்யுங்கள்!
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!
Share your comments