1. தோட்டக்கலை

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Liquid microbial farming to revitalize the crop during drought!

வறட்சியான காலத்தில் திரவ நுண்ணுயிர் உரம், பயிருக்கு உயிரூட்டும் என வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது கோடைப்பருவத்தில் ஆங்காங்கே வெப்ப சலன மழை பெய்துள்ளது. இருந்த போதிலும் சித்திரை மாதத்தில் வெப்பநிலை அதிகமாவதற்கு வாய்ப்புள்ளது. எனவேப் பயிர்களுக்கு தேவையான அளவு நீர் சிக்கனத்தினை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம்.

மேலும் வறட்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மெத்திலோ பாக்டீரியம் என்ற நுண்ணுயிர் தெளிக்கலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆலோசனைகள் (Suggestions)

மெத்தைலோபாக்டீரியம் ஒரு திரவ நுண்ணுயிர் உரமாகும். மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா. இவை ஏராளமாக இலைகளைச் சுற்றியும் மற்றும் மேற்புறத்திலும் காணப்படும். மெத்தைலோட் ரோபிக் பாக்டீரியா, மெத்தைலோ பாக்டீரியா இனத்தைச் சார்ந்தது.

  • மெத்தைலோ பாக்டீரியா ஒரு காற்று வாழ் உயிரி யாகும். இது பயிர்களுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் மற்றும் ஆக்ஸின்களை வழங்குகிறது. இந்தத் திரவ நுண்ணுயிரியினை அனைத்துப் பயிர்கள், மரங்கள் மற்றும் பூச்செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

  • பிபிஎப்எம் (PPzg) என்ற மெத்தைலோ பாக்டீரியத்தை விதை நேர்த்தி செய்து அதாவது பரிந்துரைக்கப்பட்ட விதையளவுடன் 50 மி.லி. திரவ நுண்ணுயிரியினை நன்குக் கலந்து 5 முதல் 10 நிமிடம் நிழலில் உலர்த்திப் பின்பு விதைக்க வேண்டும்.

  • PPzg நுண்ணுயிரியை 10 லிட்டர் நீருக்கு 100-200 மி.லி என்ற அளவு கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் திரவ நுண்ணுயிரியை இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

  • இந்த நுண்ணுயிரியைப் பயிர்களின் முக்கிய வளர்ச்சிக் காலங்கள், பூ மற்றும் காய் பிடிக்கும் தருணம் அல்லது 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

பிபிஎப்எம்மின் (PPzg)பயன்கள் (Uses of PPzg)

  • இது விதையின் முளைப்புத் திறன் மற்றும் நாற்றுகளின் வளர்ச்சி அதிகரிக்கின்றது.

  • சீக்கிரம் பூப்பூத்து அறுவடைக் காலத்தைக் குறைக்கிறது.

  • பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் நிறம் ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்துக்கிறது.

  • மிகக் குறிப்பாக வறட்சியைத் தாங்கும் திறனைப் பயிர்களுக்கு அளிப்பதால், 10 சதவீதம் மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை (Things to keep in mind)

  • பிபிஎப்எம் (PPzg) திரவ நுண்ணுயிரியை இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது.

  • இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு அல்லது பின்பு இந்த நுண்ணுயிர்த் திரவ உரத்தைத் தெளித்தல் வேண்டும்.

எனவே விவசாயிகள் மெத்தைலோ பாக்டீரியம் பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- நாளை முதல் அமல்!

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

English Summary: Liquid microbial farming to revitalize the crop during drought! Published on: 19 April 2021, 10:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.