வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு நம் கையில் சமைத்துப்பரிமாறுவது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கும் முறை. இதுதான் நமக்கும், விருந்தாளிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதுடன், நமது கவுரவமாகவும் கருதப்படுகிறது.
வாழை இலையில் பரிமாறி
அதேநேரத்தில் அந்த உணவை நம் வீட்டுத் தோட்டத்தில் இருந்துப் பறித்துவந்த வாழை இலையில் பரிமாறினால், இன்னும் கொஞ்சம் பெருமையாகத்தானே இருக்கும்.
அப்படியொருப் பெருமைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குதான். குறுகிய காலத்தில் வாழையை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றிச் சொல்லப் போகிறோம்.
கேலாவிருத்தி
தொழில்நுட்ப வளர்ச்சி, விவசாயத்திலும் பல நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தரமான வாழைக் கன்றுகளை, குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யும் நவீன முறையே ‘கேலாவிருத்தி’.
இந்த முறையின் மூலம் நோய்கள் இல்லாத, தாய் மரத்தின் அச்சு அசல் பண்புகளைக் கொண்ட வாழைக் கன்றுகளை உருவாக்க முடியும். இது சாதாரணக் கன்று உற்பத்தி முறைக்கும், திசு வளர்ப்பு முறைக்கும் இடையேயான சிறந்த மாற்று வழி முறையாகும்.
இதற்காக மூங்கில் அல்லது சவுக்கு மரங்கள் மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு கூடாரம் உருவாக்க வேண்டும். இல்லையெனில் பச்சை அல்லது கருப்பு நிற நரம்பு வலைகளைக் கொண்டு 90 சதவீத நிழலை ஏற்படுத்த வேண்டும்.
பயன்கள்(uses)
-
எளிய தொழில்நுட்பம் என்பதால் முதலீடு மிகவும் குறைவாக இருக்கும். லாபம் அதிகரிக்கும்.
-
உங்களுக்குத் தேவையான தரமான வாழைக் கன்றுகளை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம்.
-
ஒரு தாய்த் தண்டில் இருந்து ஐந்து மாதங்களில் 50 முதல் 60 தரமான வாழைக் கன்றுகளைப் பெற முடியும்.
-
திசு வளர்ப்புக் கன்றுகளில் ஏற்படுவது போன்ற மாறுதல்கள் இதில் ஏற்படாது.
இந்த முறையில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள் அனைத்தும் எளிதாக கிடைக்கக் கூடியவைதான்.
செயல்முறை
இட வசதிக்கு ஏற்ப கூடாரம் அமைத்து மண் மற்றும் மரத்தூள் உரம் அல்லது செம்மண் மற்றும் தேங்காய் நார்க்கழிவுகளைக் கொண்டு தரைத்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இயற்கை இடு பொருட்களான ‘பஞ்சகவ்யம்' போன்றவற்றைப் பயன்படுத்துவதால் கன்றுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். தண்ணீரும் குறைந்த அளவே தேவைப்படும்.
விதைகள் உற்பத்தி (Seed production)
இந்த முறை அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும்போது, உற்பத்திச் செலவு குறைவதோடு மட்டுமின்றி விதைகள் உற்பத்தியும் அதிகரிக்கும். முதலில் ஒரு வாழை மரத்தின் அடிப்பகுதியை வெட்டி மண் எதுவும் இல்லாமல் சுத்தமாகக் கழுவ வேண்டும். அந்த அடிப்பகுதியின் மேற்பகுதியில் 5 முதல் 6 கீறல்கள் போட்டு மண்ணில் பதியம் போட வேண்டும்.
50 கன்றுகள் (50 calves)
முதலில் பதியமிட்ட அடிப்பகுதியில் இருந்து 5 முதல் 6 பக்கக் கிளைகள் தோன்றும். 10 நாட்களில் குறுகிய அளவு வளர்ந்த பின்பு, புதியதாகத் தோன்றிய ஒரு தண்டில் இருந்து மீண்டும் அடிப்பகுதியை வெட்டிவிட வேண்டும். அதில் இருந்தும் புதிய கன்றுகள் வளரும். இவ்வாறு குறைந்தது 50 கன்றுகளைப் பெற முடியும்.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Share your comments