1. தோட்டக்கலை

தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளின் எண்ணற்றப் பயன்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Numerous Benefits of Plant Pesticides!
Credit : Tamil Samayam

விவசாயத்தைப் பொறுத்தவரைப் பூச்சிகள் மற்றும் நோய்கள்தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்த தாவரப் பூச்சிக்கொல்லிகளையும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் (Insecticides)

பொதுவாகப் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே உழவர்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.

சுற்றுச்சூழல் மாசுபாடு (Environmental pollution)

பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகளவு பயன் படுத்தும் போது வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு சுற்றுப்புறமும் மாசுபடுகிறது.
இவற்றைத் தவிர்க்க உழவர்கள் தாவரப் பூச்சிகொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுபடுத்தலாம்.

வேம்பு (Neem)

  • வேம்பின் அனைத்து பாகங்களும் உழவர்களுக்குப் பயன்படுகின்றன. வேப்பந்தழையை உரமாகவும் பூச்சி மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

  • வேப்பமுத்துக் கரைசலைப் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தலாம்.

  • வேப்பம் பிண்ணாக்கை யூரியா போன்ற இரசாயன உரத்துடன் கலந்து இட்டு யூரியாவின் பயனை அதிகரிக்கலாம்.

  • வேப்ப எண்ணெய்யைத் தனியாகவும் பிற பூச்சிமருந்துளுடன் கலந்து பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம்.

சத்துக்கள் (Nutrients)

வேப்பிலையில் தழைச்சத்து 2.5%,மணிச்சத்து 0.6%,சாம்பல் சத்து 2.0% எனும் அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம்.

வேப்பிலையின் பயன்கள் (Benefits of Neem)

  • வேப்பிலை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது.

  • நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்துவிடும்.

  • உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள்.

  • அந்துபூச்சிகள், துளைப்பான்கள் ஆகியவற்றின் தாக்குதலில் இருந்தும் தடுக்கலாம்.

வேப்பங்கொட்டைக் கரைசல் (Neem solution)

பத்து கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டு திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்துக் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தல் வேண்டும்.

பல நோய்களுக்கு மருந்து (Medicine for many diseases)

  • வேப்பங் கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப்புழு, அசுவினி, தத்துப்பூச்சிகள், புகையான், இலைச் சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன் ஈ. கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றை கட்டுபடுத்தலாம்.

  • 3 லிட்டர் வேப்ப எண்ணெய்யுடன் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு நன்றாக கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்து பயன்படுத்தலாம்.

நொச்சி-வேப்பயிலை  (Nochi-neem)

  • 5 கிலோ நொச்சித் தழையையும் 5 கிலோ வேப்பிலையையும் நீர் நிரப்பிய பானை ஒன்றில் இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்.

  • பிறகு அதனைக் கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்து பின்னர் வடிகட்டி அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஏக்கர் ஒன்றுக்கான நெற்பயிரில் தெளிக்கலாம். இதன்மூலம் இலைச்சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன், கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.

  • நொச்சி-வேப்பிலையை அரைத்துப் பயன்படுத்தினால் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.

  • வேம்பில் அசாடிராக்டின், நிம்பிடின் போன்ற பொருட்கள் இருப்பதால் பூச்சி, நோய் தடுப்பாக பயன்படுகிறது.

  • எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிக்கனமாக அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி, பயிரிடும் பயிர்களை நோய்களின் தாக்குதலில் இருந்து காப்பற்றுவதோடு சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம்.

 

தகவல்

செல்வி

வேளாண்மை உதவி இயக்குநர்

புதுக்கோட்டை

மேலும் படிக்க...

நிலையான வருமானம் தரும் மண்புழு உரம்! தயாரிப்பது எப்படி?

விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

English Summary: Numerous Benefits of Plant Pesticides! Published on: 24 June 2021, 08:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.