மல்பெரி சாகுபடியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றினால், தரமான இலைகளை அறுவடை செய்து, புது புழு வளர்ப்பில் லாபம் ஈட்டலாம் என பட்டு வளர்ச்சித்துறையினர் யோசனைத் தெரிவித்துள்ளனர்.
பட்டுப்புழு வளர்ப்பு (Silkworm rearing)
திருப்பு மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில், சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிகமாக மலபெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலைகளே ஆதாரம் (The leaves are the source)
தரமான பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய, மல்பெரி இலைகளே ஆதாரமாகும். எனவே, தரமான மல்பெரி இலைகளை உற்பத்தி செய்ய, மத்திய பட்டு வாரியம் மற்றும் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்பத்தப்படுகிறது.
விழிப்புணர்வு (Awareness)
இலைகளை உற்பத்தி செய்ய, மத்திய பட்டு வாரியம் மற்றும் பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது மல்பெரி பல ஆண்டு தாவரமாக இருப்பதால், மண்ணில் இருந்து, அதிக ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்கிறது.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து (Integrated nutrition)
இலைகளைப் பெற, ரசாயன உரங்களை அதிகளவிலும், தொடர்ச்சியாகவும் இடுகின்றனர். இதனால், மண் வளத்தைப் பாதுகாத்து, மண்ணின் தன்மையை மேம்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அவசியமாகிறது.
ஆலோசனைகள் (Suggestions)
-
மண்ணின் வளத்தை மேம்படுத்த, தொழு உரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துகள் இதன் வாயிலாகக் கிடைக்கிறது.
-
தற்போது, விவசாயிகள் கடைபிடித்து வரும், குவியல் முறையில், சூரிய ஒளி வழியாக கரிமப்பொருட்கள் உலர்ந்து விடுகின்றன.
-
மேலும், வெயில் மற்றும் மழையினால், வீணாவதால், தரமான தொழு உரம் உற்பத்தி நடைபெறுவதில்லை.
-
எளியக் காற்றோட்டமான முறையில், நிலத்தின் மேற்பரப்பில், பட்டுப்புழு மற்றும் பண்ணைக்கழிவுகளை கொண்டு, விவசாயிகளே தயாரிக்கலாம்.
-
கழிவுகளை சாய்வான நிலப்பரப்பில், சமமாகப் பரப்பி, சாணக்கரைசல், 300 கிராம் சூப்பர் பாஸ்பேட் இட வேண்டும்.
-
சமமானக் குவியலின் நீளம், 15 அடி அகலம், 7 அடி மற்றும் உயரம் 5 அடி வரையிலும் இருக்க வேண்டும்.
-
இந்தக் குவியலை, வைக்கோல் அல்லது காய்ந்த சருகுகளால் மூடி, 4-5 நாட்களுக்கு, ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
-
இம்முறையில், ஒரு ஏக்கர் தோட்டத்தில் இருந்து நான்கு அல்லது ஐந்து மாதங்களில், 5- 6 டன் அளவில், 30 சதவீத ஈரப்பதத்தில், தொழுவுரத்தை தயாரிக்கலாம்.
-
மண் பரிசோதனை வாயிலாக, ஒரு ஏக்கர் தோட்டத்துக்கு, 8 முதல் 12 டன் வரை ஒரு ஆண்டுக்கு, இரண்டு முதல் மூன்று தவணைகளாக பிரித்து இட வேண்டும்.
இவ்வாறு பட்டு வளர்ச்சித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க...
விதைக்கிழங்கு உற்பத்தி தொழில்நுட்பத்தால் வருமானம் தரும் மூலிகைச் செடிகள்!
வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
Share your comments