விவசாயிகள் பாசன நீர் குறைந்த பகுதிகளில், சிறந்த மாற்றுப்பயிராக பப்பாளியைப் பயிரிட்டு பயனடையலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீர் சார்ந்த தொழில் (Water based industry)
விவசாயம் என்பதே நீர் சார்ந்த தொழிலாகும். இருப்பினும் இருக்கின்ற நீருக்கு ஏற்றப் பயிர் சாகுபடி செய்யும்போது, அதற்கேற்ற பலனை அடையலாம். குறிப்பாக குறைந்த நீரில் சாகுபடி செய்யக்கூடிய மாற்றுப்பயிர்களை அறிந்துகொண்டு அந்தப் பயிர்களைச் சாகுபடி செய்து கூடுதல் வருமானத்திற்கு வழிவகுக்கும்.
பாசன நீர் பற்றாக்குறை (Lack of irrigation water)
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், சில நேரங்களில், பாசன நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
மாற்றுப்பயிர் (Alternative crop
இதற்குத் தீர்வாக, பாசனநீர் குறைவாக உள்ள புதியஆயக்கட்டு பகுதியில், மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பப்பாளி சாகுபடி (Papaya cultivation)
ஒரு ஏக்கர் பரப்பில், 600 பப்பாளிக் கன்றுகள் வரை சாகுபடி செய்ய முடியும். உழவு செய்து கன்றுகள் நடவு செய்வதில் தொடங்கி, வளர்ந்து மரமாகி காய்ப்பது வரை, சுமார் ரூ.60,000 வரை செலவாகிறது.
25 மாதங்கள் மகசூல் (Yield 25 months
பத்து மாதத்திலிருந்து பப்பாளியைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 25 மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும்.
அதிக நீர் தேவையில்லை (Does not require much water)
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடிக்குக் குறைந்த அளவு பாசன நீர் போதுமானதாகும். அதிக தொழிலாளர்களும் தேவைப்படுவதில்லை.
ஆண்டு முழுவதும் விற்பனை (Sales throughout the year)
பப்பாளிப் பழங்களுக்கு ஆண்டு முழுவதும் தேவையுள்ளதால், போதிய விலையும் கிடைக்கிறது. இங்கு பறிக்கப்படும் பப்பாளிப் பழங்கள், அருகிலுள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால், பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுப்பதாக உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!
கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!
கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
Share your comments