விவசாயத்தில் புதியத் தொழில்நுட்பமாக, டிரோன் மூலம் மருந்து தெளிப்பது, பூச்சி மருந்து தெளிக்கும் பணியை மிகவும் எளிதாக மாற்றிவிடுகிறது.
பிரதானத் தொழில் (The main industry)
விவசாயத்தில் புதியப் புதியத் தொழில்நுட்பங்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை, விவசாயம்தான் பிரதானத் தொழில்.ஆனாலும் விவசாயத்தில் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க மருந்து தெளிப்பதில், பல்வேறு இன்னல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சரியான அளவில் அனுபவமிக்க ஆட்களைக் கொண்டு பூச்சி மருந்து தெளிக்க முடிவதில்லை.
டிரோன் (Drone)
பூச்சித்தாக்குதல் அதிகமாகும் சூழ்நிலையில் பயிரின் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதை சரிசெய்ய அறிவியல் தொழில் நுட்பத்தில் டிரோன் எனப்படும் பறக்கும் கலன் கொண்டு ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில் மருந்து தெளித்துப் பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
10 லிட்டர் கொள்ளளவு (10 liter capacity)
வறட்சி மற்றும் புயல் காலங்களில் பாதிப்பை மிகத்துல்லியமாகக் கணக்கிட டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிரோன் எனப்படும் பறக்கும் கலன், 10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஒரு ஏக்கருக்கு 30மி.லி மருந்தே போதுமானது. இதனைக் கொண்டு பூச்சிமருந்துத் மிச்சமாகும்.
100 துளிகளாக (100 drops)
பயிர்கள் மீது 100 சதவீத பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. சிறியப் பரப்பிலும் அதிக அளவில் உள்ள பரப்பளவு கொண்ட வயலிலும் தெளிக்கப் பயன்படுகிறது.
இதன்மூலம் மருந்து தெளிக்கும்போது, ஒரு சொட்டு மருந்து 100 துளிகளாகப் பிரிந்து பரவுவதால், இலைப்பரப்பில் ஒட்டிக்கொள்ளும். எனவே டிரோனைப் பயன்படுத்தி, இயற்கை மற்றும் ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது மிகவும் எளிமையானது. ஒரு ஏக்கருக்கு வாடகையாக ரூ.500 முதல் ரூ.600 வரை வசூலிக்கப்படுகிறது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை (Things to keep in mind)
-
வயலைச்சுற்றிலும், வரப்பு ஓரங்களிலும், வயலின் நடுவிலும், மரங்கள் இருக்கக்கூடாது.
மரங்கள் இருந்தால் 5-7 அடி தள்ளித்தான் மருந்த தெளிக்க முடியும்.
-
காற்று அடிக்கும்போது இதைப் பயன்படுத்த முடியாது. 20 கிலோ எடையுள்ள கொள்கலன் காற்றினால் பாதிக்கக்கூடும்.
-
காற்று இல்லாத நேரத்தில் மருந்துத் தெளிக்கலாம்.
-
களைக்கொல்லி தெளிக்கும்போது அக்கம்பக்க வயல்களில் உள்ள பயிர்களின் தன்மையை அறிந்துகொண்டுப் பயன்படுத்தலாம்.
எதிர்காலத்தில் (In the future)
அதிக உயரத்தில் தெளிக்காமல் நடப்பட்ட உயரத்தில் தெளிக்க வேண்டும். எதிர்காலத்தில் டிரோன் பயன்பாடு சகஜமாக மாறிவிடும், என்பதிலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாக மாறிவிடும்.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
வயல்களில் பதுங்கியுள்ள எலிகள்- தந்திரமாகக் கையாள்வது எப்படி!
சந்தைப் போட்டி இல்லாத சாத்துக்குடி சாகுபடி! விவசாயிகள் ஆர்வம்!
Share your comments