PMFBY: Notice to insure rabi season horticulture crops
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்தல் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது.
தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிகள் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| தோட்டக்கலைப் பயிர்கள் | காப்பீடு தொகை ஏக்கர் - 1க்கு ரூ |
காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் |
| கொத்தமல்லி | 620.00 | 31.12.2022 |
| வெங்காயம் | 2217.50 | 31.01.2023 |
| மிளகாய் | 1220.00 | 31.01.2023 |
| தக்காளி | 1487.50 | 31.01.2023 |
| வாழை | 4875.50 | 28.02.2023 |
| மரவள்ளி | 1712.50 | 28.02.2023 |
PMFBY திட்டம்: உடனே குறுவை பயிருக்கு காப்பீடு செய்யுங்க
எனவே இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்
Share your comments