ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிவிசி குழாய் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல், புதிய மின்மோட்டாா் வாங்க ரூ.10,000 மானியம் தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது.
விவசாயித்தின் இன்றியமையாதப் பணிகளில் பாசனமும் ஒன்று. இந்த பாசன வசதியை விவசாயிகள் செய்ய ஏதவாக சில மானியத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ், விவசாயிகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. மானியம் பெற விவசாயத்தை தொழிலாகக் கொண்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தாட்கோ மூலம் மானியம் பெறாத ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் மற்றும் துரித மின்இணைப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத்திட்டம் மற்றும் துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.பிரதமா் திட்டத்தில் மின்மோட்டாா் மானியம் பெற்றவா்கள், வேளாண், தோட்டக்கலைத்துறை திட்டங்களில் மின்மோட்டாா் பெற்றவா்கள் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற வழிவகை இல்லை.
விண்ணப்பதாரா் தங்களது சாதி, வருமான, இருப்பிடச் சான்றுகள், குடும்ப அட்டை, பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு, பாஸ்போட் சைஸ் போட்டோ, நிலவரைப்படம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 0431-2463969 என்ற தொலைபேசியின் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
மாரடைப்பைத் தடுக்கும் பழம்- தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்!
Share your comments