திருப்பூர் மாவட்டத்தில், விளைநிலங்களில் நிலப்போர்வை அமைக்க ஹெக்டேருக்கு ரூ.16,000 வரை மானியம் (Subsidy) வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் என தோட்டக்கலைத் துறையினர் (Horticulture Department) அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அமராவதி புதிய ஆயக்கட்டு, பாசன பகுதியில் காய்கறி அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.
இச்சாகுபடியில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, தண்ணீர் சிக்கனம் உட்பட பல்வேறு நன்மைகளை பெற, தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறுகையில், தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, ஜோத்தம்பட்டி, வேடப்பட்டி, மைவாடி ,சங்கராமநல்லூர், குமரலிங்கம் மற்றும் பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடவு செய்து 70 நாட்களில் அறுவடை செய்யும் பயிராக இந்தப் பயிர் உள்ளது.
குறைந்த சாகுபடி செலவு, எளிமையான பராமரிப்பில் விவசாயிகளுக்கு, லாபம் வழங்கும் இந்த பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், 'மல்சிங்' (Mulching) எனும் நிலப் போர்வை முறைக்க ஹெக்டேருக்கு ரூ.16,000 மானியம் வழங்கப்படுகிறது.
2020- 21 ஆம் ஆண்டிற்கு, 17.5 ஏக்கருக்கு, மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த நிதியாண்டுக்கான மானியத்தைப் பெற விவசாயிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, எதிர்வரும் நிதியாண்டில் நிலப்போர்வை மானியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவன் செயலி (Uzhavan app)
இந்த மானியங்கள் பெற, 'உழவன்' செயலி வாயிலாகவோ அல்லது தோட்டக்கலை துறையினரை நேரடியாக அணுகியும் பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தாமோதரன் (9659838787) பிரபாகரன் (7538877132) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.
மேலும் படிக்க...
MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளே வந்துவிட்டது எலக்ட்ரிக் டிராக்டர்- விலை ரூ.5.99 லட்சம்தான் !
வறுமையை ஒழித்துக் கிராமங்களை வளமாக்கும் MGNREGA!!
Share your comments