1. தோட்டக்கலை

பழ விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 2 lakh for fruit farmers - backwards subsidy!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழ வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்கள்  (Fruits)

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருவதில், பழங்களின் பங்கு இன்றியமையாதது என்றே சொல்லலாம். அதனால் ஆதிகாலம் முதல் இன்றுவரை, அன்றாடம் பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே உண்டு.

நோய்களுக்கு இடமில்லை (There is no room for diseases)

அவ்வாறு பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டால், பல நோய்களுக்கு குட்பை சொல்ல முடியும். சில நோய்களுக்குத் தடை போட்டுவிடலாம். இந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகளவில் இருப்பதால், காய்கறிகளுக்கு நிகராகப் பழங்களின் விற்பனையும் களைகட்டும்.

விவசாயிகளுக்கு சிரமம் (Difficulty for farmers)

இருப்பினும் காய்கறிகளைக் காட்டிலும், பழங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல்வேறு சிரமங்களை விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

பொதுவாகப் பழ வகைகளைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், அவற்றைப் பாதுகாத்து, பராமரித்து விற்பனை செய்வதில் பல இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைக்க ஏதுவாக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் யு.சர்மிளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

பழ வகைகள் சாகுபடி (Cultivation of fruit varieties)

முத்தூர், கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதி விவசாயிகள், மா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, ச சப்போட்டா, நாவல், தர்ப்பூசணி, பப்பாளி உள்ளிட்டத் தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அரசு உத்தரவு (Government order)

அவ்வாறு பழ வகைகளைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 2021-2022ம் ஆண்டு தேசியத் தோட்டக்காலை இயக்கத் திட்டத்தின் கீழ், பின்னேற்பு மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பழ வகைகளின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், நல்ல விலை கிடைக்கத் தரம் பிரித்து விற்பனை செய்யவும், 2லட்சம் ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்

  • கிராம நிர்வாக அலுவலர் சான்று

  • புகைப்படங்கள்

  • பட்டா

  • சிட்டா

  • அடங்கல்

  • பழ வகைகள்

  • சாகுபடி நில வரைபடம்

  • ஆதார் அட்டை

  • குடும்ப அட்டை நகல்

இந்த மானியத்தைப் பெற விரும்பும் விவசாயிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மேட்டூர் கால்வாயில் 13 ஆண்டுகளுக்கு பின் பாசனத்திற்கு நீர் திறப்பு

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Rs 2 lakh for fruit farmers - backwards subsidy!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.