1. தோட்டக்கலை

பொது முடக்கத்தால் முடங்கியது உப்பு உற்பத்தி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Salt production paralyzed by general freeze!
Credit : Vikatan

கொரோனாப் பொது முடக்கத்தால், நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து வெளியிடங்களுக்கு உப்பு ஏற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உப்பு உற்பத்தி (Salt production)

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 6,000 ஏக்கர் பரப்பில் உப்பளங்களில் உணவு மற்றும் தொழிற்சாலைகளின் தேவைக்காக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பணியில், 2 தனியார் நிறுவனங்கள் உட்பட சிறு, குறு உற்பத்தியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

சாதகமான வெப்பநிலை (Favorable temperature)

நடப்பாண்டு உப்பு உற்பத்தி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், தற்போது நிலவிவரும் கடுமையான வெயில் உப்பு உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. இதனால், அதிகமாக உற்பத்தியாகும் உப்பை வாரும் பணித் தீவிரமடைந்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதன் காரணமாக உற்பத்தி பணிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் உப்பு வாரும் பணிகள் நடைபெறு கின்றன.

லாரிப் போக்குவரத்து (Lorry transport)

மேலும், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தால் லாரிகள் போக்குவரத்துத் தடைபட்டுள்ளது. இதனால், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு உப்பு ஏற்றும் பணி முழுமையாகத் தடைப்பட்டுள்ளது.

கடந்த முறை (Last time)

கடந்த ஆண்டில் நடைமுறையில் இருந்த பொது முடக்கத்தின் போது சில நாள்கள் தடைபட்ட உப்பு உற்பத்தி, அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருப்பதால் நிபந்தனைகளுடனான விலக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நாகை மாவட்ட எல்லைகளில் சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உப்பு ஏற்ற லாரிகள் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கடலூரில் விதை பரிசோதனை திட்ட பணிகள் ஆய்வு! அதிக மகசூலுக்கு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்!

சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

English Summary: Salt production paralyzed by general freeze! Published on: 17 May 2021, 07:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.