விதைகளின் முளைப்புத்திறனை அறிந்துகொண்டு, பயிரிடுவதுதான் மகசூலை அதிகரிக்க உதவும் என திருநெல்வேலி வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வீரியத்தைக் கண்டறிய (To find the dose)
முளைப்புத்திறன் என்பது விதையின் உயிர்த்தன்மை, வீரியத்தை அறிய உதவும்.
-
நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள் மட்டுமே, நன்கு செழித்து வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். எனவே, விதை பரிசோதனை மிக மிக அவசியமாகும்.
-
அதேநேரத்தில் ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
-
அதன்படி, மக்காசோளத்திற்கு - 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு ஆகியவற்றுக்கு 80 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும்.
-
சோளம், கம்பு, கேப்பை, வீரிய ஒட்டு பருத்தி மற்றும் பயறு வகைகளுக்கு 75 சதவீதமும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்திக்கு 70 சதவீதமும் இருப்பதை உறுதிசெய்துகொண்டு விதைப்பது சிறந்தது.
-
இதேபோல், பருத்திக்கு 65 சதவீதமும், மிளகாய்க்கு 60 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டியது கட்டாயம்.
-
இதனைச் செய்துகொள்ளாமல், கிடைத்த விதைகளை பயிரிட்டால், எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை.
-
எனவே விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுக்கென வைத்திருக்கும் விதைகளை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறன் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
-
இந்த பரிசோதனைக்கு மாதிரி ஒன்றுக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி முளைப்புத் திறனை அறியலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?
TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!
கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?
Share your comments