திருவள்ளூர் மாவட்டத்தில், மானியத்துடன் கூடிய விதை நெல் விற்பனை செய்யப்படுவதால், அதனை வாங்கிப் பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அழைப்பு விடுத்துள்ளது.
சாகுபடியில் ஆர்வம் (Interested in cultivation)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில், பெரும்பாலானோர், நெல், வேர்க்கடலை, கரும்பு மற்றும் சவுக்கு போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் செய்து வருகின்றனர்.
நிரம்பும் நீர்நிலைகள் (Filling waters)
கடந்த 13 நாட்களாக பெய்த தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.மேலும் விவசாய கிணறுகளும் நிரம்பியுள்ளன.
நெல் ரகங்கள்
இதனால், விவசாயிகள் நவரை பருவத்தில் நெல் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை பகுதிகளில் உள்ள வேளாண் விற்பனை நிலையத்திற்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். இவர்கள், குண்டு நெல், கோ - 51 மற்றும் என்எல்ஆர். - 34449 போன்ற ரக விதைகள் வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து வேளாண் விற்பனை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
விதை நெல்லுக்கு மானியம் (Subsidy for seed paddy)
-
ஒரு கிலோ விதை நெல்லுக்கு, விதை கிராம திட்டத்தின் கீழ், 17.50 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
-
மானிய தொகை வழங்காமல் உயிர் உரங்கள் வழங்கி வருகிறோம். கடந்த 12 நாட்களில், 10 டன் விதை நெல் விற்பனையாகி உள்ளது.
-
இன்னும் எங்களிடம் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் உள்ளன.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
ஆதார் அட்டை, கணினி சிட்டா ஆகியவற்றைக்கொண்டு வந்து, மானியத்துடன் விதை நெல்லை விவசாயிகள் வாங்கிச் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments