விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதற்கு விதைப் பரிசோதனை (Seed Testing) செய்து கொள்வது மிக மிக அவசியம் (Essential) என வேளாண்துறையினர் (Agriculture Department) அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து விதைப் பரிசோதனை அலுவலர் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களில் மிக மிக முக்கியமானவைகளில் ஒன்று நல்லவிதை (Quality Seed).
-
நல்ல விதை என்பது அதிக முளைப்புத் திறன், அதிக சுத்தம், குறைந்த ஈரத்தன்மை மற்றும் கலவன் இல்லாமல் இருத்தல் அவசியம்.
-
வேளாண்மை துறையினரால் ஒவ்வொரு பயிருக்கும் சாகுபடி பரப்பில் தகுந்தவாறு சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
-
திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் 3 வகையான மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்படுகின்றன.
-
எனவே விதைச் சான்றளிப்பு பிரிவில் பதிவு செய்து, விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் விதைச்சான்று உதவி இயக்குநர் மூலம் வரவழைக்கப்படுகிறது
-
அதேநேரத்தில் அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகள், விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்து மாதிரி எடுக்கப்பட்டு நேரடியாக வரவழைக்கப்படுகிறது.
-
விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் நோடியாக பரிசோதனைக்கு அனுப்பும் போது இணையதளம் மூலம் பதிவு செய்த பின்னர் ஒருவிதை மாதிரிக்கும் ரூ.30 கட்டணம் செலுத்தி, விதையில் தரத்தை அறிந்து பயிர் செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்திற்கு 25 ஆயிரம் கால்நடைக் கொட்டகைகளைக் கட்டித்தருகிறது மத்திய அரசு!
41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!
Share your comments