பட்டுபுழு வளர்ப்புத் தொழிலில் மிகுந்த கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று இளம்புழு வளர்ப்பாகும். பட்டுப்புழுக்களில் நோய்கள் வராமல் தடுக்க இளம்புழுக்களிலிருந்தே நல்ல சுகாதாரமான சூழலில் வளர்க்க வேண்டும். சரியான மல்பெரித் தழைகளைக் கொடுத்து வளர்ப்பறைகளில் தகுந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் சூழ்நிலையில் இளம்புழுக்களை வளர்த்தால் அவை நோய் எதிர்க்கும் திறன் பெற்று பிறகு நல்ல மகசூலைத் தர வல்லது.
இளம்புழு வளர்ப்பறை
ஒவ்வொரு பட்டு விவசாயியும் இளம்புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஒர் அறை வைத்திருக்க வேண்டும். இதனால் முதரிந்த புழுக்களை வளர்க்குமிடங்களிலிருந்து கிருமித் தொற்றைத் தவிர்க்க முடியும். மேலும் இளம்புழு வளர்ப்பிற்கு சிறிய அளவே இடவசதி தேவைப்படுவதால், தட்ப வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க முடியும், இளம்புழு வளர்ப்பறைகளில் 28 செல்சியஸ் வெப்பநிலையும் காற்றில் ஈரப்பதம் 70 முதல் 80 சதமும் இருக்க வேண்டும் ஒரு ஏக்கர் மல்பெரித் தோட்டத்திற்கு இளம்புழு வளர்ப்பிற்கு சுமாராக 150 சதுர அடி பரப்பு கொண்ட வளர்ப்பறைத் தேவை. வளர்ப்பறை 15 X 10 X 16 என்ற அளவில் அமைக்க வேண்டும். நான்கு பக்கமும் கதவுகள் கொண்ட ஜன்னல்களை அமைக்க வேண்டும்.
இளம்புழு வளர்ப்பு சாதனங்கள்
* இளம்புழுக்களை வளர்க்க இதற்கெனப் பிரத்தியேகமாகச் செய்யப்படும் 3 X 2 அடி அளவுள்ள பிளாஸ்டிக் அல்லது மரத்தட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியோ, அல்லது அவற்றை தாங்கிகளில் வைத்தோ புழுக்களை வளர்க்கலாம்.
* தட்டுகளில் மெழுகுத்தாளைப் பரப்பி அவற்றின் மேல் பட்டுப்புழு முட்டை அட்டைகளை வைக்கவேண்டும். நன்கு நனைத்துப் பிழியப்பட்ட நுரைப்பஞ்சுப் பொதிகளை தட்டுகளில் வைத்து மெழுகுத் தாளைக் கொண்டு முட்டை அட்டைகளை மூட வேண்டும்.
முட்டை பொறிப்பு முன்னேற்பாடுகள்
* இளம்புழு வளர்ப்பறை மற்றும் புழு வளர்ப்புத் தளவாடகங்கள் அனைத்தையும் 2 பார்மலின் அல்லது 2.5 சதம் குளோரின் டை ஆக்ஸைடு திரவம் கொண்டு கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.
* முட்டை தரமான நோயற்ற பட்டுப்புழு முட்டைத் தொகுதிகளை தேவைக்கேற்ப அங்கிகரிக்கப்பட்ட முட்டை விற்பனை நிலையங்களிலிருந்து வாங்கி வரவேண்டும்.
அடைகாத்தல், இருட்டடைப்பு
* பட்டப்புழு முட்டைகள் 250 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 80 சத ஈரப்பதம் கொண்ட சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும். இதனால் முட்டை பொறிப்பது சீராக இருக்கும்.
* முட்டை பொறிப்பதற்கு 24 மணி நேரம் முன்பு முட்டைகளில் கருவின் தலை உருவாகி நீல நிறம் அடையும் நிலையில் முட்டைகளின் மேல் கருப்புக் காகிதம் அல்லது துணி கொண்டு மூடி இருட்டடைப்பு செய்வதால் கரு முழுமையாக சீராக வளர்ச்சியடையும்.
* பருவ நிலைக்கேற்ப முட்டைகள் 9 முதல் 12 நாட்களில் பொறிந்து விடுகின்றன. முட்டைகள் பொறிக்கும் நாளன்று, ஒன்றிரண்டு புழுக்கள் வெளிவருவதைக் கண்டவுடன், வெளிச்சத்தின் தூண்டுதலால் சீராக முட்டைகள் பொறிந்து விடும்.
தொற்றுநோய்க் கிருமி நீக்கம்
2% ஃபார்மலினுடன்,0.3% சுண்ணாம்பு அல்லது 2.5% க்ளோரின் டை ஆக்சைடுடன் 0.5% சுண்ணாம்பை 2லி/மீ2 அளவிற்கு பட்டுப்புழு வளர்க்கும் இடத்தில் ஒரு முறை பட்டுப்புழு வளர்ச்சி முடிந்தவுடன் உடனடியாக இந்தக் கரைசலை தெளிக்கவும் மற்றும் துடைப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும் தெளிக்கவும்.
2% ப்ளீசிங் பவுடர் கரைசலில் பட்டுப்புழு வளர்க்கும் கருவிகளை முக்கி வைக்கவும். உபயோகப்படுத்தும் முன்பு கருவிகளை வெயிலில் வைத்து உலர்த்தவும்.
5% ப்ளீசிங் பவுடர் கரைசலுடன் சுண்ணாம்பு தூளை சேர்த்து 200கி/மீ2 (சதுர மீட்டர்) என்ற அளவில் கலந்து வளர்ப்புக் கூடத்தை சுற்றியும், தண்ணீர் 1லி/ மீ2 (சதுர மீட்டர்) என்ற அளவில் கலந்து தரைப் பகுதியிலும் தெளிக்கவும்.
முட்டை மற்றும் குஞ்சு பொரிப்பை அடைக்காத்தல்
* முட்டைத் தகடை ஒரு அடுக்காக தட்டின் மீது பரப்பி விடவும்.
* 250 செ வெப்பநிலை மற்றும் 80% ஈரப்பதம் உகந்தது. இதற்கு வெண் மெழுகு காகிதம் மற்றும் ஈரமான நுரை உடைய சேணப் பையுரையை பயன்படுத்தலாம்.
* முட்டைகள் முதிர்ச்சியடைகின்ற பருவத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அந்த முட்டைகளை கருப்பு நிற காகிதத்தில் சுத்து பெட்டிக்குள் வைக்க வேண்டும். முட்டைகள் பொரிக்கும் நாட்கள் வந்ததும் அதனை வெளியே எடுத்து வெளிச்சத்தில் வைக்கவும். அவ்வாறு செய்தால் அனைத்து முட்டைகளும் ஒரே சீராக பொரியும்.இது முட்டைகரு உருவாவதற்கு உதவி புரியும்.
* அதிகப்படியான முட்டைகள் (90-95%) இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் பொறித்துவிடும்.
முட்டைகளை பாதுகாக்க குறைந்த செலவு முறை
* முட்டைகளை மண்ணாலான அடைக்காப்பு அறையில் வைக்கவும்.
* வரைப்படத்தை வரைந்து எவ்வாறு அறையில் ஈரப்பதம் பராமரிக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும்
துடைத்தல்
* முட்டையிலிருந்து பொரிக்கப்பட்ட புழுக்களை பட்டினியாக வைக்கக்கூடாது. வெண் மெழுகு காகிதத்தில் துடைத்து வளர்க்கும் தட்டில் வைக்கவும். அல்லது நீல நிற பாலித்தீன் தாளில் வைக்கவும் (வளர்ப்புப் படுக்கை)
* முட்டையிலிருந்து பொரிக்கப்பட்ட புழுக்களுக்கு 0.5 – 1 செ/ மீ2 (சதுர மீட்டர்) அளவில் மல்பெரி இலைகளை நறுக்கி தூவி விட வேண்டும்.வளர் புழுக்கள் அந்த இலைகள் மீது ஊர்ந்து செல்லும்
* 8-10 நிமிடங்கள் கழித்து, முட்டை தகட்டை கவிழ்த்தி புழு வளர்க்கும் தட்டில் போட்டு வடிமுனை தட்டில் வைக்கவும்
* புழுக்கள் முட்டை தகட்டிலேயே ஒட்டி இருந்தால் சுத்தமாக அதனை எடுத்து தட்டில் போடவும்
* வளர்ப்புப் படுக்கையில் தேவை என்றால் மல்பெரி இலைகளை நறுக்கி தூவி விட வேண்டும்
* இலைகள் வாடாமல் இருக்க வளர்ப்புப் படுக்கை ஈரப்பதமான நுறையுடைய தாள், மற்றும் வெண் மெழுகு தாள்களை வைத்து நன்றாக மூடி ஈரப்பதமான நிலையை பக்குவப்படுத்தி வைக்கவும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments