1. தோட்டக்கலை

மானியத்துடன் கூடிய இடுபொருட்கள்- வேளாண்துறை அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Subsidized Inputs- Agriculture Call!

கோவை மாவட்டம் ஆனைமலைப் பகுதி விவசாயிகளுக்கு, மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளதால், வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண் துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி (Paddy cultivation)

இதுதொடர்பாக ஆனைமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:

ஆனைமலை ஒன்றியத்தில், இரண்டாம் போக நெல் சாகுபடி துவங்கியுள்ளதால், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 10 டன் 'கோ - 51' ரகம் நெல் விதை இருப்பில் உள்ளது. ஒரு கிலோ விதையின் விலை, 37 ரூபாய். விரைவில் நெல் விதைக்கு மானியம் வழங்கப்படும்.

விலை நிலவரம் (Price)

அதேபோல், பல்வேறு பயிர்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் 15 டன் நுண்ணுாட்டம் கைஇருப்பில் உள்ளன. இதில் ஒரு கிலோ தென்னை நுண்ணுாட்டத்தின் விலை 86 ரூபாய். நிலக்கடலை நுண்ணுாட்டம், 38 ரூபாய்.சிறு தானியங்களுக்கான நுண்ணுாட்டம், 46 ரூபாய். பயறு வகை பயிர்களுக்கான நுண்ணுாட்டம், 64 ரூபாய். கரும்புக்கு, 53 ரூபாய்

இந்த நுண்ணுாட்டங்கள் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை அதிகரித்து, நோயைத் தாங்கி வளரும் திறனை வழங்குவதுடன், உயிர் ஊக்கியாகவும் செயல்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.

விவசாயத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இயற்கை உரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

நெல் மகசூல் (Paddy yield)

எனினும் பல்வேறு புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்ளாததாலும் தேவையான இடுபொருள்களை, குறிப்பாக நுண்ணூட்ட சத்து நிறைந்த உரங்களை உரிய காலத்தில் வயலில் இடாததாலும் நெல் மகசூல் குறைந்து விடுகிறது.

நெல் பயிர் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் தருவதற்கு, 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுவதாக வேளாண் துறை தெரிவிக்கிறது. கார்பன் மற்றும் ஆக்சிஜனை வாயு மண்டலத்தில் இருந்தும், ஹைட்ரஜன் மழைநீர் மற்றும் பாசன நீரில் இருந்தும், பிறச்சத்துக்களை மண்ணில் இருந்தும் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன.

நுண்ணூட்டம் (Micronutrients)

தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பேரூட்டச் சத்துக்களாகவும், கால்சியம், மக்னீஷியம், கந்தகச் சத்துக்கள் 2-ம் நிலை சத்துக்களாகவும், இரும்பு, மாங்கனீஷ் துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டீனியம், மற்றும் குளோரின் போன்றவை நுண்ணூட்டச் சத்துக்களாகவும் பயிர்களுக்குப் பயன்படுகின்றன.

நுண்ணூட்டச் சத்துக்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு சிறிதளவே தேவைப்படுகிறது. என்றாலும், பயிர்களின் வளர்ச்சி காலத்தில் அவைகள் கிடைக்கா விட்டால், ஏனைய உரங்களை இட்டாலும், உரிய மகசூல் சரியாகக் கிடைக்காது. பயிர்களுக்கு அனைத்து சத்துக்களும் அளித்தால்தான் சீரான வளர்ச்சியும் சிறந்த மகசூலும் கிடைக்கும்.

துத்தநாகச் சத்து

உதாரணமாக நுண்ணூட்டச் சத்துக்களில் முக்கியமானது துத்தநாகச் சத்து. இது பயிர்களில் வளர்ச்சி ஊக்கத்தையும், மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து உற்பத்தியையும் ஏற்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியையும், கதிர்களில் மணி அதிகளவில் பிடிக்கவும், நீரை சீராக உறிஞ்சவும் உதவுகிறது. துத்தநாகச் சத்து குறைந்தால் இலைகளின் நரம்பு வெளுத்துப் போதல், தூர் வளர்ச்சி குறைதல், தானிய முதிர்ச்சி தாமதம், கெய்ரா என்ற நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இச்சத்து பற்றாக் குறையைப் போக்க, ஹெக்டேருக்கு துத்தநாக சல்பேட் 25 கிலோ இடவேண்டும்.

மேலும் படிக்க...

1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!

3 வேளாண் சட்டங்கள் ரத்து குடிரசுத் தலைவர் ஒப்புதல்- போராட்டம் என்னவாகும்?

English Summary: Subsidized Inputs- Agriculture Call! Published on: 03 December 2021, 11:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.