தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில், கோவையில் செடிகள், உரம், இயற்கை விவசாயத்திற்கான மருத்துகள் உள்ளிட்டவை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தோட்டம் அமைத்தல் (Setting up the garden)
தோட்டம் அமைத்துச் செடிகளைப் பராமரிக்க அனைவருக்குமே ஆசைதான் என்றாலும், அதில் உள்ள நடைமுறைச் சிக்கலே, விதைகள், செடிகள், அவற்றை வளர்ப்பதற்கான உரங்கள் உள்ளிட்டவற்றை எங்குத் தேடிச் சென்று வாங்குவது என்பதுதான்.
ஊக்குவிக்க நடவடிக்கை (Action to promote)
அவ்வாறுத் தோட்டமோ அல்லது மாடித் தோட்டமோ அமைக்க விரும்புபவர்களை ஊக்குவிக்கத் தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மானிய விலையில் விற்பனை (Sale at subsidized prices)
இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் தடாகம் சாலையில், புதிய விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மாடி வீடுகளில் வளர்ப்பதற்கானச் செடி வகைகள், உரங்கள், மருந்துகள் ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதலும் நடைபெறுகிறது.
மேலும் இங்கு, காய்கறிகள், பழவகைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்டப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்குக் குறைந்த விலையில் தரமானப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வேலை நேரம் (Working hours)
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மையம் இயங்கும். பொதுமக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை இங்கு வந்து வாங்கிச் செல்லலாம். இந்தத் தகவலைத் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments