விவசாயத்திற்கு ஆடு மாடுகள் ஆதரவாக, ஆதாரமாக இருப்பதைப் போல், பறவைகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே பறவை வளர்ப்பும் தற்போதையத் தேவையாகி வருகிறது.
மழை பொய்த்து, விவசாயம் கைகொடுக்காத காலங்களில், உழவர்களுக்குக் கைகொடுப்பது கால்நடை வளர்ப்பு. இதன் காரணமாகவே ஆடு, மாடு வளர்ப்பு என்பது எப்போதுமே விவசாயத்தின் ஆதரவுத் தொழிலாகத் திகழ்கின்றன.
இந்தப்பட்டியலில் பறவைகளும் இடம்பெற வேண்டியது அவசியம். ஏனெனில், விதைகள் பரவல், மகரந்தச் சேர்க்கை உள்ளிட்ட பயிர்வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் சில செயல்களுக்கு வித்திடுகின்றன.
விவசாயிகளுக்கு, பெரும்பாலான நேரங்களில் நன்மை செய்பவர்களாகவும் சில வேளைகளில் தீமை செய்பவர்களாகவும் பறவைகள் உள்ளன.
பறவைகளின் நன்மைகள் (Benifits)
-
விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவச் செய்தல், மகரந்த சேர்க்கைக்கு போன்றவற்றிற்கு உதவுகின்றன.
-
பயிருக்கு தீமை தரும் பெருமளவிலான பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன.
-
மனிதர்களால் தெருக்களில் வீசி எறியப்படும் கழிவுகளை உண்டு, சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றன.
-
பறவைகள் எழுப்பும் ஒலி மனதிற்கு இதமாகவும் பெரும்பாலான சமயங்களில் உள்ளது.
தீமைகள் (Disadvantages)
-
நாற்றங்கால் அல்லது வயல்களில் விதைக்கப்படும் விதைகளை உண்டு விடுகின்றன.
-
ஒரு செடியில் இருந்து மற்றொருச் செடிக்கு எளிதில் நோய்களை எடுத்துச் சென்று, நோய்பரவலுக்கும் காரணமாகிவிடுகின்றன.
-
விளைச்சல் காலங்களில் கதிர்கள் மற்றும் மணிகளை உண்டு சேதப்படுத்தி விடுகின்றன.
தகவல்
ச.பாலமுருகன்,
உதவிப் பேராசிரியர் பூச்சியியல் துறை
பிரிஸ்ட் பல்கலைக்கழகம்
மேலும் படிக்க...
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
Share your comments