நுண்ணுயிர்கள் உலகில் தோன்றிய காலம் அளவிட முடியாதது. மரம், செடிகள் தோன்றுவதற்கு பல காலம் முன்பிருந்தே பரவி மண்ணை செழிப்பாக்கியவற்றை, மனித இனம் ஒரு நூற்றாண்டுக்குட்பட்ட காலத்திலேயே அளிக்காத தொடங்கியது விந்தையல்லவா?
இத்தகைய நுண்ணுயிர்களின் செயல்பாடுகளை மீண்டும் மீட்டெடுத்து மண்ணை உயிருள்ளதாக மாற்ற விவசாய நண்பர்களுக்கு உதவும் இந்த சிறு நுண்ணுயிர்கள் குறிப்பு.
ரைசோபியம்
நுண்ணுயிர்கள் உலகில் தோன்றிய காலம் அளவிட முடியாதது. மரம், செடிகள் தோன்றுவதற்கு பல காலம் முன்பிருந்தே பரவி மண்ணை செழிப்பாக்கியவற்றை, மனித இனம் ஒரு நூற்றாண்டுக்குட்பட்ட காலத்திலேயே அளிக்காத தொடங்கியது விந்தையல்லவா?
இத்தகைய நுண்ணுயிர்களின் செயல்பாடுகளை மீண்டும் மீட்டெடுத்து மண்ணை உயிருள்ளதாக மாற்ற விவசாய நண்பர்களுக்கு உதவும் இந்த சிறு நுண்ணுயிர்கள் குறிப்பு.
ரைசோபியம்
இவை பயிர்களை சார்ந்து செயல்படுகின்றன. விண்ணிலுள்ள தழைச்சத்தினை ஈர்த்து பயிரின் வேர்களில் முடிச்சுகளாக சேகரிக்கின்றன. அந்தச்சத்தினை பின்னர் பயிர்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. பயறுவகை பயிர்களுக்கும், நிலக்கடலை, சோயா போன்றவற்றுக்கு வெவ்வேறு இனங்கள் கண்டறிய பட்டுள்ளவற்றை தெரிந்து பயன்படுத்தினால் உரிய பலன் கிடைக்கும். மேலும் இத்தகைய குறிப்பிட்ட இன ரைசோபியத்துடன் அடியில் குறிப்பிடப்பட்ட பாஸ்போ பாக்டீரியாவையும் இணைத்து விதை நேர்த்தி செய்தால் கூடுதல் பலன் பெற வாய்ப்புள்ளது.
அசோஸ்பைரில்லம்
இவையும் பயிரின் வேர்களுடன் இணைத்து விண்ணிலிருந்து தழைச்சத்தினை ஈர்த்துக் கொடுப்பதுடன், சில பயிர் ஊக்கிகளை சுரந்து கொடுக்கிறது. இவற்றில், இரண்டு இனங்களில் ஒன்று நெற்பயிருடன் இணக்கமாகும். மற்றது இதர பயிர்கள் குறிப்பாக கரும்பு, எள், பருத்தி போன்றவற்றுடன் மரப்பயிர்களுக்கும் பொருத்தமானது.
அசட்டோபேக்டர்
இவை பயிர்களுடன் இணையாமலேயே தனித்து செயல்படும். பயிர்களின் வேர்களைப் பெருக்கி, ஓரளவு வறட்சியை தாங்க உதவுவதுடன் காற்றிலிருந்து தழைச்சத்தை ஈர்ப்பதுடன் சில உயிர்ச் சத்துக்களையும் சுரக்கின்றன. பல பயிர்களுடன் சிறப்பாக உதவுகிறது. நிலத்தில் அங்ககப் பொருட்கள் மிகுந்திருந்தால் சிறப்பாக செயல்படும்.
பாஸ்போ பாக்டீரியா
பயிர்களுக்கு பொதுவாக குறைவாகவே தேவைப்படும் மணிச்சத்து மண்ணிலிருந்தாலும் கூட, சிறைப்பட்டிருக்கும். அதனை பயிர்கள் பயன்படுத்தும் அளவுக்கு, இப்பாக்டீரியாக்கள் மாற்றித்தருவதால், மிக முக்கியமானவை.
பொட்டாஷ் பாக்டீரியா
அண்மைக்கால கண்டுபிடிப்பாகும். பயிர்கள் உறுதியாக நிற்பதற்கு தேவையான சிலிகான் சத்து மண்ணில் அதிகமிருந்தாலும் இவை அதனை கரைத்து அத்துடன் சாம்பல் சத்தினையும், ஓரளவுக்கு மணிச்சத்தினையும் ஈர்த்து பயிருக்கு தரும் நிலையில் செயல்படுகின்றன. இவை சிலிகானுடனும் இதர சில நுண்ணுயிர்களுடனும் இணைத்து செயல்பட்டு, பயிர்களுக்கான பொட்டாஷ் தேவையினை 25% வரை குறைப்பதாக அறியப்படுகிறது.
"ஆல்கே வகையைச் சார்ந்த" நீலப்பச்சைபாசி
சூரிய ஒளியும், வெப்பமும், நீரும் போதிய அளவில் இருக்கும்போது, நெல் பயிருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு, களன எடுக்கும் போது சேற்றில் அமுங்கி வளமூட்டி கூடுதல் பலனளிக்கிறது. இவற்றுக்கு மேலும் நல்ல பயன்பாடுகள் உள்ளன. அதாவது இவற்றின் சில வகைகள், எரிசத்து ஆற்றல் உற்பத்தி மற்றும் புரத உற்பத்தி போன்றவற்றுக்கும் பயன்படலாம்.
அசோலா
குறைவான வெப்பநிலை உள்ள பருவத்துக்கு உகந்தது. அப்போது இதில் உள்ள நீலப்பச்சை பாசி ரகம், காற்றிலுள்ள தழைச்சத்தினை கிரகித்து வைக்கிறது. இதனை நெற்பயிரிலேயே துவக்க நிலையில் பெருக்கம் செய்து களை எடுக்கும் போது அமுக்கிவிட்டால், நெற்பயிர் செழித்துப் பலனைப் பெருக்குகிறது. இத்தகைய அசோலாவை இலகுவாகப் பெருக்கம் செய்து பயன்படுத்த என்ன செய்யலாம்?
நில வசதியுள்ள தோப்புகளில் பாத்திகள் அமைத்து நீர் காசியா வண்ணம் சில்பாலின் வகை பாலிதீன் பரப்பியோ அல்லது தொட்டிகளிலோ, மண் , நீர், பசுஞ்சாணம் இவற்றுடன் சூப்பர் பாஸ்பேட் கலந்து அசோலாவை விட்டு பெருக்கலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை தொடரலாம். ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் சூப்பர் பாஸ்பேட் இடுவது அவசியம். அறுவடை செய்யப்பட்ட அசோலாவை நெற்பயிருக்கு உயிர் உரமாக மேலே குறிப்பிட்டபடி பயன்படுத்தி, வளம் பெருக்கி பயனடைவதுடன் பசுமையாகவோ, உலர்தியோ அவரவர் சூழலுக்கும் தேவைக்கும் தக்கபடி கால்நடை, கோழிகள், மீன், ஆகியவற்றின் வளர்ப்புகளுக்கான தீவனத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தியும், தீவனச் செலவினை குறைப்பதுடன், வருவாயினையும் பெருக்கலாம். நாம் மண்ணில் இடும் தழைச்சத்து உர அளவுக்கு மேல் இந்நுண்ணுயிர்கள் காற்றிலிருந்து ஈர்த்தளிக்க வல்லவை என தெரிந்துக்கொண்டாலே இவற்றின் தேவையினை உணரலாம்.
K.Sakthipriya
krishi Jagran
Share your comments