தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் முதல் நேரடி தமிழ்வழி அங்கக வேளாண்மை பயிற்சி நடைபெறவுள்ளது.
மாதாந்திரப் பயிற்சி (Monthly training)
கோயமுத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், மாதந்தோறும் நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக, இந்த பயிற்சி சிறிதுகாலம் நடத்தப்படவில்லை. பின்னர் ஆன்லைன் (Online)மூலம் நடத்தப்பட்டு வந்தது.
மீண்டும் பயிற்சி (Training again)
தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி மீண்டும் தொடங்கப்படுகிறது.
வேளாண் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையின் மூலம் பிரதி மாதம் 7ம் தேதி நேரடி தமிழ்வழி அங்கக வேளாண்மை பயிற்சி வரும் மார்ச்2021 முதல் தொடங்கப்பட உள்ளது.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் (Special features of the training)
-
இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை
-
இயற்கை முறையில் களை மேலாண்மை
-
இயற்கை உரம் மற்றும் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல்
-
இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு
-
அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம்
-
ஆகியத் தலைப்புகளில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சிக் கட்டணம்
இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 590. பயிற்சி நாளன்று நேரடியாக பயிற்சிக் கட்டணம் செலுத்தலாம்.
7 ம் தேதி என்பது சனி, ஞாயிறு கிழமைகளில் வந்தால் அடுத்த வேலை நாட்களில் (திங்கட்கிழமை) நடைபெறும் முன்பதிவு அவசியம்.
கூடுதல் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
மின்னஞ்சல் organic@tnau.ac.in
தொலைபேசி : 0422 6611 206/ 2455055யைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை முறைகள் குறித்த இலவச பயிற்சி!
Share your comments