தோட்டக்கலைத்துறை பண்ணையில் விற்பனை செய்யப்படும் மரக்கன்றுகளை வாங்கி பயன் அடையுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நேமம் வேளாண் பண்ணையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆட்சியர் பார்வையிட்டார் (The collector visited)
இந்த ஆய்வின்போது வேளாண் பண்ணையில் பல்வேறு இடங்களில் தோட்டக்கலை பயிர் வகைகளைச் சேர்ந்த கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருவதை ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மரக்கன்றுகள் வளர்ப்பு (Cultivation of saplings)
தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.
இவை சுமார் 10 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயப் பண்ணைகள் (Agricultural farms)
அந்த வகையில் தேவகோட்டை, காரைக்குடி வட்டத்தில் நேமம், திருப்புவனம் வட்டத்தில் கிளாதரி ஆகிய 3 இடங்களில் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாய பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பலவகை மரக்கன்றுகள் (Variety of saplings)
அங்கு பல்வேறு வகைகளை சேர்ந்த மா, பலா, கொய்யா, முந்திரி, தென்னை, பப்பாளி, எலுமிச்சை, நார்த்தை, நெல்லி, நாவல் மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்கப்படுகின்றன.
மானியத் திட்டம் (Grant scheme)
அரசு விவசாய பண்ணையில் மானிய திட்டத்தில் மரக்கன்றுகளைப் பெற்று நடவு செய்வதன் மூலம் மரக்கன்றுகளின் தன்மைக்கேற்ப 3 மாதத்திற்கு ஒருமுறை பயன்தரும் மரக்கன்றுகள், 6 மாதத்திற்கு ஒருமுறை பயன்தரும் மரக்கன்றுகள், வருடத்திற்கு ஒருமுறை பயன்தரும் மரக்கன்றுகள் என பலதரப்பட்ட மரக்கன்றுகள் உள்ளன.
நிரந்திர வருமானம் (Permanent income)
இவற்றைப் பெற்று நிலத்தில் நடவு செய்து விவசாயிகள் பராமரிக்கும் பொழுது ஆண்டு முழுவதும் நிரந்தர வருமானம் கிடைக்கும். எனவே பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை வாங்கி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
மானியங்கள் (Subsidies)
மேலும் தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறையின் மூலம் அரசு எண்ணற்ற மானியங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இணை வருமானம் (Co-income)
மருந்து தெளிப்பான், பவர் டில்லர், டிராக்டர் போன்ற உபகரணங்களும் மானியத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. எனவே விவசாயிகள் நெல் விவசாயப் பணிகள் முடிந்த நிலையில் தற்பொழுது தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிட்டு இணை வருமானத்தைப் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
நெல்மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க, சேற்றில் புரண்டு விவசாயி நூதன போராட்டம்!
விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!
நள்ளிரவில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை அறிய புதிய யுக்தி!
Share your comments