கோடையில் நாம் தவறாமல் ருசிக்க வேண்டியவற்றில் மாம்பழமும் ஒன்று. ஏனெனில், இந்த முறைத் தவறவிட்டால், அடுத்த வருடம் வரைக் காத்திருக்க வேண்டும். சீசனைத் தவறவிட்டுவிட்டால், உங்கள் கைகளுக்கு இந்த மாம்பழங்கள் சிக்காது.
அந்த வகையில் முக்கனியில் முதல் கனியான மா வில் நூற்றுக்கணக்கான ரகங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நூர்ஜஹான் ரகம் எப்போதுமே பணக்காரர்களின் பழமாகவேத் திகழ்கிறது. இவ்வாறு காஸ்ட்லி மாம்பழமாகத் திகழ, இப்பழத்தின் தெவிட்டாத இனிப்புச்சுவையே காரணம்.
இவ்வளவு சிறப்புமிக்க இந்தப்பழம், அதிக சதைப்பற்று கொண்டது. ஒரு மாம்பழத்தின் எடை3.75கிலோ முதல் 4கிலோ எடை வரை இருக்கும்.
இதன் தாயகம் ஆப்கானிஸ்தான் தற்போதை மத்திய பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் பயிடப்பட்டு வருகின்றன.
நூர்ஜஹான் மாம்பழங்கள், ஆயிரம் ருபாய் முதல் இரண்டாயிரம் ருபாய் வரை ஓரு கிலோ விற்பனை செய்யபடுகிறது. ஜனவரி, பிப்ரவரியில் பூத்து, ஜூன் மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். அதற்குள் அலைபேசிவாயிலாக விற்பனைக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.தற்போதைய பருவகால மாற்றத்தால் அதிக அளவாக பூக்கள் உதிர்ந்து குறைவான மாங்காய்கள் உற்பத்தியாகின்றன. இந்தப் பழங்களின் கொட்டையே 350 கிராமை ஆக்கிரமிக்கும்.
மா பழங்களின் இராணி யாக இந்த ரகம் உள்ளது என்பது மிகையல்ல.
பொதுவாக மாம்பழங்களை விரும்பி உண்ணும் நபர்களுக்கு இது ஒரு அரியவகையான பழம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
Share your comments