பிரதமரின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்து வாழை, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளுக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு 2020-21ம் ஆண்டில் ராபி பருவத்தில் வாழை, தக்காளி, கத்தரி, முட்டைக்கோஸ், சிவப்பு மிளகாய், உருளை கிழங்கு ஆகிய பயிர்களுக்குக் காப்பீடு செய்யலாம்.
நடப்பாண்டில் பயிர் காப்பீடுத் திட்டத்தில் இணைவது விருப்பத் தேர்வு முறையில் செயல் படுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 2020-21ம் ஆண்டில் ரபி (Rabi) பருவத்தில் வாழை, தக்காளி (Tomato), கத்தரி (Brinjal) , முட்டைக்கோஸ், சிவப்பு மிளகாய் (Red Chilly), உருளை கிழங்கு (Potato) ஆகிய பயிர்களுக்குக் காப்பீடு செய்யலாம்.
நடப்பாண்டில் பயிர் காப்பீடுத் திட்டத்தில் இணைவது விருப்பத் தேர்வு முறையில் செயல் படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைவதற்கு மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
-
அடங்கல் நகல்
-
வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
-
ஆதார் அட்டை நகல்
-
பயிர் சாகுபடி சான்றிதழ்
ஒப்புகைக்சீட்டு (Acknowledgment slip)
காப்பீடுத் தொகையை செலுத்தி, அதற்கான ஒப்புகைச் சீட்டினை பதிவு செய்த பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு மற்றும் சிவப்பு மிளகாய்க்கு இம்மாதம் 31ம் தேதி வரையிலும், தக்காளி, வாழை, கத்திரி பயிர்களுக்கு மார்ச் 1ம் தேதி வரை யிலும் காப்பீடு செய்யலாம்.
பிரீமியம் தொகை (Premium)
மேலும், ஏக்கருக்கு 5 சதவீத காப்பீடு தொகையாக வாழைக்கு ரூ.3.230ம், தக்காளிக்கு 1,767ம், கத்திரிக்கு ரூ.1.247ம், உருளைக் கிழங்கிற்கு ரூ. 1602ம், முட்டைக்கோஸிற்கு ரூ.1210ம், சிவப்பு மிளகாய்க்கு ரூ.1,123ம் பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும் செலுத்தி பயிர் காப்பீடு பெறலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களை அருகில் உள்ள வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் படிக்க...
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
Share your comments