தமிழகத்தில் குளிர் காலம் விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், கொளுத்தி, வாட்டி வதைக்கும், கோடை காலம் வந்துகொண்டிருக்கிறது.
எனவே மார்ச் முதல் மே வரையிலான கோடைகாலத்திற்கு ஏற்ற பயிர்கள் எவை என்பது குறித்தும், அவற்றை எவ்வாறு பயிரிட வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.
விவசாயமே பிரதானம் (Agriculture is the mainstay)
இந்தியாவைப் பொறுத்தவரை 60 சதவீத மக்களின் வாழ்வாதாரத்திற்கு, விவசாயம் சார்ந்த தொழிலே அடிப்படையாக இருக்கிறது. ஏனெனில் நம் வாழ்வின் அத்தனை அங்கங்களும், விவசாயம் சார்ந்தவை.
தொடர்பு சங்கிலி (Contact chain)
எப்பயென்றால், பயிர் சாகுபடி, பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி, எண்ணெய் வித்துக்கள், பால் உற்பத்தி, கோழிவளர்ப்பு இவை அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை.
அந்த வகையில் கோடையில் நிலவும் காலநிலை மற்றும் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. எனவே சாகுபடிப்பான சீசன், காரீஃப்,ரபி, கோடை பயிர்கள் என 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கோடைகாலப் பயிர்கள் (Summer crops)
கோடைப் பயிர்கள் என்பவை பெரும்பாலும், மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் விளைவிக்கப்படுபவை. இந்த சீசனின் ஆரம்பத்தில் ஹைபிரிட் பயிர்கள்தான் விளைவிக்கப்படும்.
இவற்றிற்கு போதுமான அளவுக்கு தண்ணீர் தேவைப்படும். எனவே நீர் மேலாண்மை என்பது மிக மிக அவசியமாகிறது. குறிப்பாக இந்த பருவத்தில், காய்கறிகளும் கலப்பு தானியங்களுமே பிரதானப்பயிராக விளைவிக்கப்படும்.
காய்கறிகள் (Vegetables)
ஹைபிரிட் வெண்டை, ஹைபிரிட் தக்காளி, வெள்ளரிக்காய், தர்யூசணி, சிறுபருப்பு, பாகற்காய், பூசணிக்காய், ஹைபிரிட் கத்தரி ஆகியவை கோடைகாலப் பயிர்களாகும்.
இந்த பயிர்களின் இனப்பெருக்கத்திற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. எனவே சாகுபடி காலம் நீண்டதாக இருக்கும்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
இதை செய்தால் போதும்- மாமரப் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும்!
மத்திய அரசின் புதிய PLI திட்டம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
Share your comments