1. தோட்டக்கலை

எந்த வகை மண்ணையும் சத்து நிறைந்ததாக மாற்றும் மருந்து எது? விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What is the medicine that makes any soil nutritious? Details inside!

இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்துப் பயிரைப் பாதுகாக்க உதவும் மருந்துகளில் ஜீவாமிர்தம் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் பயிர்களின் வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் சிறந்த ஊக்கச் சத்தாக ஜீவாமிர்தம் பயன்படுகிறது. இதனை எவ்வாறு தயார் செய்வது என்று இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் (required things)

பசுஞ்சாணம் - 10 கிலோ

  • பசுங்கோமியம் - 10 லிட்டர்

  • வெல்லம் - 2 கிலோ

  • பயறுவகைமாவு - 2 கிலோ

  • தண்ணீர் - 200 லிட்டர்,
  • வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ

  • (அ)கரும்புச்சாறு 4 லிட்டர்

  • (அ) பனம்பழம் - 4

  • பயறு வகை மாவு - 2 கிலோ

  • (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக்கடலை (அ) உளுந்து)

  • பயன்படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப்பட்ட மண் கையளவு

  • தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)


தயாரிப்பு முறை (Preparation)

தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம், பயறு வகை மாவு, வெல்லம் இவற்றை முதலில் நன்கு இல்லாதவாறு கரைத்துக் கொள்ள வேண்டும்.

200 லிட்டர் தண்ணீரைச் சேர்த்து நிழலான தொட்டியின் வாய் பகுதியை மூடி வைக்க வேண்டும்.

தினமும் 2 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் மூலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விட வேண்டும்.

48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜீவாமிர்தம்.

பயன்படுத்தும்முறை (Method of use)

விதை நேர்த்தி செய்ய ஜீவாமிர்தம் மிகவும் உகந்ததாகும். விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விடுவது அவசியம்.
நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனைய விட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

நன்மைகள் (Benefits)

  • ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

  • ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து பயன்படுத்தும்போது, மண் புழுக்களின் வரவு அதிகரிக்கிறது.

  • வேர்அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.

  • ஜீவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்து நிறைந்த மண்ணாக மாற்றி விடுகின்றது.

  • ஜீவாமிர்தம் தெளிப்பதால் நுண்ணியிரிகளின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.

மேலும் படிக்க...

ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!

துவரை நடவு செய்ய ரூ.5700 மானியம்- வேளாண்துறை அழைப்பு!

=========

English Summary: What is the medicine that makes any soil nutritious? Details inside! Published on: 30 September 2021, 06:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.