1. தோட்டக்கலை

தைப் பட்ட காய்கறிகளுக்கு என்ன விலை கிடைக்கும்-TNAUவின் முன்னறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit: Simplicity

தைப்பட்டத்தில் விவசாயிகள் தேடிச் சென்று காய்கறிகளை விதைத்துள்ள நிலையில், இந்த முறை என்ன விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தக்காளி (Tomato)

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 205.73 இலட்சம் டன் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.
நாட்டின் மொத்த தக்காளி உற்பத்தியில், தமிழ்நாடு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்களிக்கின்றது. தமிழ் நாட்டில், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், திருப்பூர் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

தமிழ்நாட்டில் தைப் பட்டத்திலேயே தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
கோயம்புத்தூர் சந்திகளுக்கு நாச்சிபாளையம், ஆலந்துறை, பூளுவாம்பட்டி மற்றும் கிணத்துக்கிடவு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகளவில் உள்ளது. வரும் மாதங்களில், கர்நாடகாவில் இருந்து வரும் வரத்து மட்டுமே, தக்காளி விலையில் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும்.

கத்திக்காய் (Brinjal)

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2019- 20ம் ஆண்டு இந்தியாவில் கத்திரி 127.77 இலட்சம் டன் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், தர்மபுரி கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்கள் கத்திரி பயிரிட்டுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து போதுமான வரத்து வந்து கொண்டிருக்கிறது.

வெண்டைக்காய் (Ladies Finger)

தமிழ்நாட்டில், சேலம், தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக கோயம்புத்தூர் சந்தைகளுக்கு ஒட்டன் சத்திரம், பொள்ளாச்சி மற்றும் வைகுண்டம் பகுதிகளில் இருந்து வெண்டை வரத்தானது அதிகளவு வருகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்திண்படி இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகியவற்றின் விலையை சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.

விலை (Price)

இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.15 முதல் ரூ.18, வரை கிடைக்கும். இதேபோல், நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.32 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் பண்ணை விலை ரூ.25 முதல் ரூ.27 வரையும் இருக்கும்.

எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

கூடுதல் விவரங்களுக்கு,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்.
0422 2431405. காய்கறிப் பயிர்கள் துறை 0422 6611374 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!

English Summary: What is the price of sewn vegetables - TNAU's forecast! Published on: 30 January 2021, 11:31 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.