1. தோட்டக்கலை

எந்தெந்த பயிர்களுக்கு எப்போது & எவ்வளவு தண்ணீர் தேவை?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Which crops need when & how much water?
Credit: DNA India

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். மனிதனுக்கு மட்டுமல்ல பயிருக்கும் உயிராக இருப்பது நீர். இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல, அளவுக்கு அதிகமாகும்போது, நீரும், பயிருக்கு எமனாக மாறிவிடுகிறது. எனவே எந்தெந்த பயிருக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை விவசாயிகள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதோ அந்தப் பட்டியல்!

நிலக்கடலை (Groundnut)

  • சுமார் 550 மி.மீ. நீர் தேவைப்படும். நிலம் நன்கு நனையும் படி நீர்கட்ட தகுந்த ஈரப்பதத்தில் உழவு செய்தபின்பு கடலையை விதைப்பது நல்லது.

  • நிலம் காய்ந்திருந்தால் உயிர்த்தண்ணீர் கட்டவேண்டும். பின் 12 நாட்கள் காயவிட்டு நீர் பாய்ச்ச வேண்டியது அவசியம்.

  • அதன்பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. எனினும் விழுது இறங்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம் முக்கிய நீர்த்தேவை பருவங்களாகும்.

  • நுண்தெளிப்பு நீர்ப்பாசன முறையைக் கடைபிடிப்பதன் மூலம் 40 விழுக்காடு நீர் சேமிப்பு கிடைக்கும்.

பருத்தி(Cotton)

  • அதிகபட்சம் 650 மி.மீ. நீர் தேவைப்படும். நிலத்தின் தன்மைக் கேற்றவாறு 12-15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

  • பூக்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம், காய் வளர்ச்சிப் பருவம் ஆகியவை முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகக் கருதப்படுகிறது.

கரும்பு (Sugarcane)

  • கரும்பிற்கு மொத்தமாக 1800 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றபடி பின்வரும் இடைவெளி நாட்களில் நீர் பாய்ச்சலாம்.

  • முளைப்புப்பருவத்தில் ஐந்து நாட்கள், வளர்ச்சிப்பருவத்தில் 7 முதல் 8 நாட்கள், முதிர்ச்சிப் பருவத்தில் 10-11 நாட்கள் என்ற ,இடைவெளியில் நீர் பாய்ச்சுவதால் அதிக விளைச்சல் கிடைப்பதுடன் 30 சதவீதம் வரை நீர் சேமிக்க வாய்ப்பு உண்டு.

  • குறைந்த அளவு நீர் கொண்டு அடிக்கடி நீர் பாய்ச்சுவதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

எள் (Sesame)

  • மிகக்குறைவான அளவு நீர் அதாவது 200-250 மி.மீ. தேவைப்படுகிறது. பூக்கும், காய் பிடிக்கும் பருவங்கள் முக்கியமான நீர் பாய்ச்ச வேண்டிய பருவங்களாகும்.

சூரியகாந்தி (Sunflower)

  • பயிரின் மொத்த நீர்த்தேவை 450 மி.மீ. ஆகும்.

  • சராசரியாக 10-12 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

  • பூக்கும் பருவம், விதை பிடிக்கும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவை பருவங்களாகும்.

மேலும் படிக்க...

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

 

English Summary: Which crops need when & how much water? Published on: 04 January 2021, 08:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.