1.பருவத்திற்கு ஏற்ற விதைகளை தேர்வு செய்து விற்பனை செய்ய வேண்டும் - வேளாண் அதிகாரி அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள், தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
புதிய ரக விதைகள் இந்த பருவத்துக்கு ஏற்றதா? என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்க வேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால், நடவு செய்தவுடன் கதிர் வராமல் இருத்தல் போன்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும். மற்றும் விதை சட்ட விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி கூறி உள்ளார்.
2.மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமைத் தொகை தரும் பணியை, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை
மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமைத் தொகை தரும் பணியை, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு, அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவு துறை சார்பில், சட்டசபையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது. அத்தருணத்தில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.
3.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் ஏப்ரல் மாத இலவச பயிற்சி விவரம்
25.04.2023 டிரோன் மூலம் பூச்சி கொல்லி/ விரட்டி ( கெமிகல்/இயற்கை) தெளித்தல் செய்முறை விளக்க பயிற்சி.
27.04.2023 ஒருங்கிணைந்த முறையில் ஆடு வளர்ப்பு
29.04.2023 சுருள் பாசி வளர்ப்பு தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல்.
4.கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பு
கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாகி உள்ளதாக ஐ.நா காலநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டில் 1.15 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் பதிவானதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5.கொச்சியில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ
கேரள மாநிலம் கொச்சியில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ படகு சேவை தொடங்கவுள்ளது.
நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டுக்கு வாட்டர் மெட்ரோவை அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
6.இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ.5,615க்கும், சவரனுக்கு ரூ.44,920க்கும் விற்பனை
7.மதுரையில் ஆலங்கட்டி மழை
கோடை வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில், நேற்று மதுரையில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
இதனால் வெப்ப தாக்குதலிலுருந்து விடுபட்டு மதுரை மக்கள் மகிச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments