தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த உரிமை தொகையை பெற சில நிபந்தனைகள் உள்ளது.
ரூ.1,000 உரிமைத்தொகை
தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 2023 -2024 ஆண்டுக்காண பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் இத்திட்டத்தை அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் நிபந்தனைகள் அடிப்படையில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் வெளியான தகவலின் படி வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
முக்கிய அப்டேட்
தற்போது ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்த தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் இதுவரை அரசிடமிருந்து திட்டம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ரேஷன் விதிமுறைகளில் மாற்றம்!
அட்சய திருதியை 2023: தங்கம் வாங்குவதற்கு ஏற்ற முகூர்த்த நேரம் இதோ!
Share your comments