கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லோசான அறிகுறி தென்பட்டால், CT-ஸ்கேன் எடுப்பதை தவிர்ப்பது நல்லது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று ஒருவரை தாக்கியதும், அவரது நுரையீரல் பகுதி அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, நேயாளி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடுகிறது. இதனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு, CT-ஸ்கேன் (CT scan) எடுக்கப்பட்டு நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்பட சிகிச்சை அளிக்கப்படும்.
தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சையளிக்க படுக்கைகள் இன்றி திணறி வருகின்றனர். அத்துடன் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அறிகுறியில்லாத கொரோனா வைரஸ் தாக்குதல், லேசான அறிகுறிகளுடன் (Covid-19 symptoms) உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளும் உள் உறுப்புகளில் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள CT-ஸ்கேனை அதிக அளவில் நாடுகின்றனர். பொதுவாக CT-ஸ்கேன் உள் உறுப்புகளை தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கும் என்பதால் பொதுமக்களும் அதற்கு பயப்படுவதில்லை.
இந்நிலையில், CT-ஸ்கேன் மிகவும் ஆபத்தானது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா (AIIMS director Dr Randeep Guleria) எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது., "ஆய்வுகளின்படி 30 முதல் 40% மக்கள் கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் குணமடைந்து வருகின்றனர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மிதமாக கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தேவையில்லாமல் CT-ஸ்கேன் எடுப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன், உங்களுக்கு கொரோனா தொடர்பாக சந்தேகம் இருந்தால் முதலில் எக்ஸ்ரே எடுங்கள். பின்னர், மருத்துவர்கள் அறிவுறுத்தினால் மட்டுமே CT-ஸ்கேன் எடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டும் இன்றி "ஒருமுறை நீங்கள் CT-ஸ்கேன் எடுத்தால் அது 300 மார்பக-எக்ஸ்ரே எடுப்பதற்கு சமமானது (1CTScan = 300-400 Chest X-rays!) எனவும் கூறியுள்ளார். இது நமக்கு புற்றுநோய் விளைவுகளை ஏற்படுத்தும்’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! - WHO எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பரவல் அச்சம்! தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Share your comments