1. செய்திகள்

மே 6 முதல் தமிழ்நாட்டில் புதிய அரசு கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை.

Sarita Shekar
Sarita Shekar

Lock down

சென்னை: கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தொற்றின் அளவில் எழுச்சி காணப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் ஏற்கனவே பல கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு நேற்று மாலை மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. புதிய விதிமுறைகள் மே 6 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

- குளிரூட்டப்படாத பல்பொருள் மற்றும் மளிகைக் கடைகளைத் தவிர, மற்ற கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது. 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே மளிகைக் கடைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். இந்த கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்

- மருத்துவ கடைகளுக்கும் பால் வழங்கலுக்கும் எந்த தடையும் இருக்காது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- ரயில் மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் டாக்சிகளில் கட்டுப்பாட்டுக்கு  உட்பட்ட பயணம் அனுமதிக்கப்படும். வாகனங்களில் 50% கொள்திறனிலேயே பயணிக்க முடியும்.

- அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

- மீன், கோழி மற்றும் பிற இறைச்சி வகைகளை விற்கும் சந்தைகள் மற்றும் கடைகள் வார நாட்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இவற்றை இயக்கலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவை அனுமதிக்கப்படாது.

- உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் உணவை எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உணவு / தேநீர் உட்கொள்ள முடியாது. 

- பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி வழங்கல் தடையின்றி தொடரும்.

- சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை உட்புற ஆடிட்டோரியங்களில் நடத்துவதற்கும் மாநில அரசு தடை விதித்தது. சினிமா அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

- இறுதிச் சடங்குகள் மற்றும் தொடர்புடைய சடங்குகளில் பங்கேற்க 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. முன்னதாக, இதுபோன்ற நிகழ்வுகளில் 25 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

- நகராட்சிகளில், நகர்ப்புறங்களில் உள்ள முடிதிருத்தும் மையங்கள், ஸ்பாக்கள் ஆகியவற்றின் இயக்கத்திற்கு ஏற்கனவே தடை இருந்தது. தற்போது அரசாங்கம் இந்த தடையை கிராமப்புறங்களில் உள்ள சலூன்கள் மற்றும் ஸ்பாக்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

- மேலும் உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை அரசாங்கம் நீட்டித்துள்ளது. 

- தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அரசாங்கம் கூறியது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு அவ்வப்போது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க..

முழு ஊரடங்கால், வெறிச்சோடிய தமிழகம்! கொரோனா தடுப்பு நடவடிக்கை!

மே 1 இல் ஊரடங்கு இல்லை! தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: New Govt restrictions in Tamil Nadu from May 6: What is allowed? Why not?

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.