1. செய்திகள்

பொங்கலுக்கு 1000 ருபாய் உறுதி!! தமிழக அரசின் அதிரடி சரவெடி அறிவிப்பு! மகளிர் உரிமைத்தொகை புதிய அறிவிப்பு!

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
1000 rupees for pongal cofirmed by tamilnadu chief minister

பொங்கல் பரிசு பொருட்களான தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொருட்களின் கொள்முதல் நடந்து வருகின்ற நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

1000 ருபாய் உறுதி!

2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதனை கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பு ஒன்றினை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கான கொள்முதல் நடந்து வருகின்ற நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கடந்த ஆண்டு ரூ.1,000 வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துகொண்டிருந்தனர் மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கத்தொகை வழங்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தபடி இருந்தது.

நடப்பாண்டிற்கான அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரை, பச்சரிசி, முழுக் கரும்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஏதேனும் நிதியுதவி அறிவிக்கப்படுமா என்கிற ஆவல் பொதுமக்கள் மத்தியில் கடுமையாக இருந்தது. அதற்கு விருந்தளிப்போன போல் இன்று அறிவிப்பு வெளியானது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமை தொகை

இந்தநிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.1,000 தொகையானது பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேல் முறையீடு செய்தவர்களுக்கும் இனி மகளிர் உரிமை தொகை!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில் 11.85 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்களில் தற்போது 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த மாதம் வழங்கப்படவுள்ள மகளிர் உரிமைத்தொகையில் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.15 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Pongal பரிசுத்தொகுப்பு: முழுக்கரும்பு- சர்க்கரைக்கான கொள்முதல் விலை எவ்வளவு?

பொங்கல் உட்பட ஜனவரி மாதம் இவ்வளவு நாட்கள் வங்கி விடுமுறையா?

English Summary: 1000 rupees for pongal cofirmed by tamilnadu chief minister Published on: 05 January 2024, 02:57 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.