1.12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,சென்னையில் இன்று நடைபெற்ற மே தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், " 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
2.சாத்தூரில் மிளகாய் விளைச்சல் அமோகம்
சாத்தூர் பகுதியில் மிளகாய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனத்தின் மூலம் பருத்தி, கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்த படியாக பெரும்பாலான விவசாயிகள் மிளகாயை சாகுபடி செய்துள்ளனர்.
மிளகாய் அறுவடை செய்யப்பட்டு சாத்தூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விளைச்சல் அதிகரித்து வந்தால் ரூ.40 முதல் ரூ.50 வரை விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
3.வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை ஆனது.
4.அதலபாதாள விலைக்கு சென்ற தக்காளி
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை
5.15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, நாகை, கடலூர், தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
6.சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்தது.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்தது...
சென்னையில் சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 21 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை.
மேலும் படிக்க
ATM பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிகள் மாற்றம்: இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவில் அடுத்த சில நாட்களில் மழை, ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு!
Share your comments