1. செய்திகள்

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 12 இலங்கைத் தமிழர்கள்

T. Vigneshwaran
T. Vigneshwaran

12 Sri Lankan Refuges Arrived Chennai

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை தொடர்ந்துவருகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக 12 பேர் தனுஷ்கோடி மணல் தீடையில் தஞ்சமடைந்தனர். அவர்களை மீட்டு கடலோர காவல் குழுமம் போலீசார் விசாரணை செய்து பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அந்நாட்டு மக்கள் வாழ வழியின்றி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே பொருளாதாரப் பிரச்னை காரணமாக இலங்கையிலிருந்து 150 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இலங்கையில் இருந்து ஆறு சிறுவர்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

அதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து போலீசாரின் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:

பயணிகளுக்கு செப்டம்பர் 25 வரை விமானத்தில் இலவச பயணம்-ஏன்?

விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் முதல்வர், காரணம் என்ன?

English Summary: 12 Sri Lankan Tamils who took refuge in Dhanushkodi

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.