தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் பாதுகாப்பற்ற உடலுறவு முறை காரணமாக ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.4 லட்சமாக இருந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 85,268 ஆக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2011 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 17,08,777 பேர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 3,18,814 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 2,84,577 பேரும், கர்நாடகத்தில் 2,12,982 பேரும், தமிழகத்தில் 1,16,536 பேரும், உத்தர பிரதேசத்தில் 1,10,911 பேரும், குஜராத் மாநிலத்தில் 87,440 பேரும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மேலும், இந்தக் காலகட்டத்தில் ரத்த தொடர்பு மூலமாக 15,782 பேரும், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் தன்மை மூலமாக 4,423 பேரும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 81,430 குழந்தைகள் உள்பட 23,18,737 பேர் ஹெச்.ஐ.வி தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இருந்தபோதும், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது" என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
கொரோனா அதிகரித்தாலும் முகக்கவசம் கட்டாயமில்லை - எப்போது முதல்?
Share your comments