
2050 special buses from Chennai to deal with crowd tomorrow
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 1-ந்தேதி (சனிக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும் எனவே தொடர்ந்து விடுமுறை நாட்கள் இருப்பினும் 3ந்தேதி மட்டும் வேலை நாள் ஆயிற்று அதுவும் திங்கிட்கிழமை. இருப்பினும் அரசு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3-ந்தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போன்று 3ந்தேதி மட்டும் வேலை நாள் ஆகிவிட்டது.
மேலும் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
30 மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடதக்கது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து வெளியூர் செல்லக்கூடியவர்கள் பயணத்தை தொடங்குவதால் பல்வேறு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பஸ்கள் சென்னையில் இருந்து கூடுதலாக இயக்கப்படுகிறது.
"நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 2050 சேர்ந்து மொத்தம் 4150 பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் தேவையை கருதி கூடுதலாகவும் இயக்க தயாராக உள்ளோம். கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க பகுதி வாரியாக பிரித்து பஸ்கள் இயக்கப்படுகிறது குறிப்பிடதக்கது.
மழை பெய்யாவிட்டால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவது வெளியூர் பயணத்தை முடக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:
கோர்டேவா விதை நேர்த்தியில் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகம்!
Share your comments