1. செய்திகள்

20-வது மாநகராட்சியானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்!

R. Balakrishnan
R. Balakrishnan
20th Corporation Tambaram

சென்னையை அடுத்த தாம்பரம் (Tambaram) சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இதற்கான அவசர சட்டம் அரசிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியாக்கப்பட்ட சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

20வது மாநகராட்சி

தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் மற்றும் செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை மற்றும் திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும், 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக, அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாம்பரம் 20வது மாநகராட்சி (20th Corporation) என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை

தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம் உள்ளிட்ட 5 பேரூராட்சிகளின் மொத்த பரப்பு 87.64 சதுர கிமீ ஆகும். மொத்த மக்கள் தொகை 9.60,887, வருவாய் ரூ.303.93 கோடியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நகராட்சிகள், பேரூராட்சிகள் மட்டும் சேர்க்கப்படும் நிலையில், ஊராட்சிகள் சேர்க்கப்படவில்லை. இந்த ஊராட்சிகளில் தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்ததும், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க

காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது: தமிழகத்தில் 6 பேர் தேர்வு!

English Summary: 20th Corporation Tambaram: Emergency Law Enforced! Published on: 05 November 2021, 11:05 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.